Monday, April 28, 2008

சுய அறிமுகம்

ராகவேந்திரன் என்பது எனது திருநாமம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி என்னும் கிராமம் / நகரம் இரண்டுங்கெட்டான் ஊரில் வாழ்ந்து வருகிறேன்.
வயிற்று பிழைப்புக்காக கணினியில் தட்டச்சு செய்து வருகிறேன் கடந்த 10 ஆண்டு காலமாக, இன்று எனது கருத்துக்களை பகிர்ந்துக் கொள்வதற்காக இணையத்தில் தட்டச்சு செய்துள்ளேன் எனது வலைப் பதிவை படிக்கும் இணைய தள நண்பர்களுக்காக எனது நன்றியினை உரித்தாக்குகிறேன், இணையத்தில் இவ்வாறு வலை பதிவை ஆரம்பித்து கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள உதவிய எனது அன்பு நண்பர் பெத்துசாமிக்கு எனது நன்றியினை உரித்தாக்குகிறேன். சமுதாயத்தில் நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பற்றி பேச போவதில்லை, சமுதாயம் சார்பாக என்னுடைய கோபங்களையும் வேதனைகளையும் பகிர்ந்துக் கொள்ளவே துர்வாசர் என்று என் வலை பதிவிற்கு பெயரிட்டுள்ளேன். இனி நாளொரு மேனியும் பொழுதொரு தினமுமாக தினமும் ஏதாவது கிறுக்கிக் கொண்டு இருப்பேன் என நம்புகிகறன். எதிர் கருத்துக்களை நிச்சயம் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்
அன்புடன்
ராகவேந்திரன்,தம்மம்பட்டி


No comments:

Post a Comment