Thursday, September 30, 2010
அய்யோ தீ = கொட்டை எடுத்த புலியா கொட்டை எடுக்காத புலியா
இன்று மதியம் லக்னோ உய்ர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பல தரப்பினருக்கு மகிழ்ச்சி, பல தரப்பினருக்கு சோகம், பல தரப்பினருக்கு இது தான்யா நரசிம்மராவ் ஸ்டைல் என்று ஒரே குதூகலம், அதாவது பாம்பும் சாகக் கூடாது, தடியும் உடையக் கூடாது, நல்லா கொடுக்கிறாங்கய்யா தீர்ப்பு, நாமும் வரவேற்று வைப்போம், எதற்காக என்றால் நாட்டில் எந்த ஒரு அசம்பாவிதமும் இந்த பதிவு எழுதம் இரவு 9 மணி வரை நடைபெறாத காரணத்திற்காக, அதற்காக நான் நீதியரசர் சாரி நீதிபதி களை பாராட்டுகிறேன். ஆனால் 3 நீதிபதிகளுக்குள் ஒரே தீர்ப்பாக இல்லாமல் கருத்து வேறுபாடு ஏன் வந்தது, என்ன உள் குத்து இது, அது மட்டுமின்றி வருகிற பொதுத் தேர்தலை மனதிற் வைத்துக் கொண்டு வெளி வந்த தீர்ப்பாகவும் நான் கருதுகிறேன், ஆஹா இந்த ரகளையில் காமன்வெல்த் ஊழலை எல்லாம் தேசம் மறந்து விட்டது. ஜெய்ஹோ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment