Tuesday, August 24, 2010

யாருக்கும் வெட்கமில்லை

புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது, இந்தியரா-விஸ்வநாதன் ஆனந்த், என்ன ஒரு ஞானம் நம்மை ஆளும் நடுவண் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு, அவர் ஸ்பெயினில் தனது விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்காகவும் பயிற்சிக்காகவும் அடிக்கடி ஸ்பெயின் செல்கிறார், அது மட்டுமின்றி அங்கு ஒரு வீடு வாங்கி உள்ளார், அதனால் அவ்ர் இந்தியர் இல்லை என்றாகி விடுமா என்ன? ஒரு விளையாட்டு வீரரோ அல்லது வேறு யாரோ வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் அவசியம் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) தேவை, அவ்வாறு பாஸ்போர்ட் பெறும் போதே அவர் இந்தியரா என்று விசாரிக்க மாட்டார்களா இந்த பிரகிருதிகள், அது மட்டுமின்றி ஆனந்த் தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் தன்னுடன் தனது தேசியக் கொடி யை ஏந்திய ஒரு லோகோவை அருகிலே வைத்திருப்பார். இது அனைவருக்கும் தெரியும், இந்த பிரகிருதிகள் அதைஎல்லாம் பார்த்திருந்தால் தானே அது தெரியும், அது மட்டுமின்றி அவர் மணந்துள்ளது ஒரு தமிழ் பெண்ணை, அவரும் தமிழர்,  இது குறித்து நேற்று மத்திய மந்திரி கபில் சிபில் நேரடியாக ஆனந்திடம் வருத்தம்தெரிவித்துள்ளார், என்னை கேட்டால் அந்த கோப்பினை நிறுத்தி வைத்திருந்த சம்மந்தப்பட்ட அரசு அதிகாரியின் சம்பளத்தை பட்டுவாடா செய்து அவரை பணி நீக்கம் செய்திருக்க வேண்டும், 
    ஆனாலும் இதற்கு பதில் கூறும் விதமாக நேற்று ஆனந்தின் நேர்காணல் மிகவும் அருமையாக இருந்தது, எனக்கு எந்த ஒரு வருத்தமும் கிடையாது, பிறிதொரு நாளில் இந்த பட்டத்தை ஏற்றுக் கொள்வது பற்றி கூறுகிறேன், பிப்ரவரிக்கு பிறகு பார்க்கலாம் என்று படு யதார்த்தமாக கூறி சென்று விட்டார், நிஜமாகவே அவருக்கு ஒரு ராயல் சல்யூட் வைக்கலாம், 
இதில் ஒரு ஆதங்கம் என்னவென்றால் இந்த கொடுமை யாராவது ஒரு கிரிக்கெட்டருக்கு நடந்திருந்தால் நாடே அல்லோகலப்பட்டிருக்கும், செஸ் தானே , என்று ஒரு அலட்சியம், உலக சாம்பியன் அய்யா அவர், அதற்காவது உரிய மரியாதை தாருங்கள், ஒரு டெஸ்ட் போட்டி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதம வியாதியிலிருந்து உள்ளூர் 84வது வட்ட செயலாள வியாதி வரை வாழ்த்து தெரிவிப்பவர்கள் இந்த அவச் செயலுக்கு எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்காதது எனக்கு மிகவும் கொதிப்பாக உள்ளது, 

இ்ந்த நிலைமை கங்குலிக்கோ அல்லது டெண்டுல்கருக்கோ நடந்திருந்தால் அந்தந்த மாநில அரசு பொங்கும், நமது மாநில அரசு நமீதா அல்லது குஷ்புவிற்கு ஏதாகிலும் அவமதிப்பு நடந்தால் தான் பொங்கும் மற்றதற்கு எல்லாம் பொங்காது அய்யா பொங்காது


No comments:

Post a Comment