வந்தாயிற்று மழைக்கால கூட்டத்தொடர், வழக்கம் போல கடந்த 2 நாட்களாக அவையில் எந்த பணிகளும் நடக்கவில்லை, மக்களின் வரிப்பணம் வழக்கம் போல் வீண், இதை ஒரு வழக்கமான பஜனையாக வைத்துள்ளனர் எதிர்கட்சிகள், நினைத்து பாருங்கள் கடந்த 3 ஆண்டுகளில் இதுபோல் எத்தனை முறை எதிர்கட்சிகள் சபையை நடத்த விடாமல் ரகளை அழிச்சாட்டியம், செய்திருக்கிறார்கள் என, இதனால் என்ன பயன் என்று சற்றேனும் சிந்திக்க மாட்டார்ளா? நமது மரமண்டை எம்.பி.க்கள், உருப்படியாக ஒன்றும் செய்வது கிடையாது,
நமது காம்ரேட் மர மண்டடைகளும் சரி, பிஜேபி மர மண்டைகளும் சரி, விலைவாசி ஏற்றம் தாளாத வகையில் உயர்ந்துக் கொண்டுள்ளது, அந்த செய்தியினை மக்களிடம் எவ்வகையில் கொண்டு செல்ல முடியுமோ அந்த வகையில் கொண்டு செல்ல வேண்டியது எதிர்கட்சிகளின் கடமை, ஆனால் இந்த மரமண்டைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக தினமும் இன்று நான் எப்படி கத்தினேன் தெரியுமா? நீ எப்படி கத்தினாய் தெரியுமா தெலுங்கு பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் ரேன்ஜில் கத்தியே போய் விடுகிறார்கள், டிவியில் பார்க்கும் நமக்கு ரத்தக் கொதிப்பு எகிறுகிறது,
டிஸ்கி- கடந்த வாரம் பீகாரில் சட்டமன்றத்தில் நடந்த கூட்டத்தில் ஒரு காங்கிரஸ் சட்டமன்ற பெண்மணி ( பஜாரி) நடத்திய கூத்தைப் பார்த்தபோது எனக்கு தில் பட சொர்ணாக்கா நினைவு தான் வந்தது, மேலாடை நழுவியது கூட தெரியாமல் பூஜாடியை எடுத்து துவம்சம் செய்கிறார்,
அருகில் உள்ள நமது கனவான்கள் (காவல்துறையினர்) அம்மணியை நன்கு ஜொள்ளு விட்டு ரசிக்கின்றனர், அடுத்த நாள் அனைத்து செய்தித் தாள்களிலும் நமது அம்மணியின் ஒன்சைடு ஓப்பன் போஸ் மிகவும் பிரபலம் போங்கள் , என்ன செய்ய அம்மணி நயன்தாரா போல் இருந்தால் நான் கூட ஜொள்ளு விட்டிருப்பேன், ஆனால் பாருங்கள் வயதாகி போன பண்டரிபாய் போல் அல்லவா அக்கா இருக்கிறார்கள், உருப்படியாக மக்கள் பிரச்சினையை பேசக் கூடிய நாட்கள் எப்போது தான் நமக்கு வாய்க்கும்


I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
ReplyDelete