Tuesday, July 20, 2010

துவேஷ காழ்ப்புணர்ச்சி

நேற்று எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் http://www.jeyamohan.in/?p=7317 மிக அருமையாக சாதியுடன் புழங்குதல் என்ற தலைப்பில் மிக நேர்த்தியாக விஜய் என்பவருக்கு பதில் கூறும் வகையில் ஒரு அழகான கட்டுரை எழுதியிருந்தார். இது குறித்து எனது நெருங்கிய நண்பர் ஒருவருடன் காராசாரமாக விவாதமும் நடைபெற்றது. அந்த நண்பர் மட்டுமின்றி நான் உரையாடும் ஏனைய நண்பர்களும் சரி வர்ணாசிரமத்தை உருவாக்கியது பிராமணர்கள் தான் என்பது போலவும், பிராமணர்கள் மட்டுமே இப்போது உள்ள ஜாதிய கூறுகளுக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் காரணம் என்பது போலவே பேசுகிறார்கள், பொதுவாக அவர்கள் கூறியுள்ளார்கள்,இவர்கள் கூறியுள்ளார்கள், என்று மேம்போக்காக பேசியே காலம் கழிக்கிறார்கள். நான்பேசிய பல நண்பர்களும் சற்று விரிவாக மனு தர்ம சாஸ்திரத்தினை முழுமையாக படித்து உள்ளீர்களா என்று கேட்டால் அதை மேற்கொள்காட்டி பெரியார் இந்த இதழில் பேசினார், அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் என்று கூறுகிறார்களே தவிர, இவர்கள் படித்து அதை அறிந்து உணர்ந்ததாக நான் அறிந்திலன், இதைப் பற்றிய ஆழ்ந்த அறிவோ கூர்நோக்கோ எதுவும் இல்லை,  அது மட்டுமின்றி இதுபோல் கடவுளை நிந்தித்தோ அல்லது பிராமணியம், போன்றவற்றை பேசினாலே ஒஹோ ஏதோ விசயம் தெரிகிறது போலும், புத்திசாலிகள் என்று அவர்களுக்கு அவர்களே சமாதானம் செய்துக் கொள்கிறார்கள். சற்று மனம் திறந்து பேசுவோம் இனி, சுதந்திரம் பெற்று இத்தனை காலமான பின்பும் பிராமணரல்லாதவர்கள் பலமுறை ஆட்சி பொறுப்பேற்றும் ஏன் இந்த அவலநிலை என்று அவர்கள் மனதை தொட்டு மனசாட்சியுடன் பதில் பெற முயற்சி செய்யுங்கள், அது மட்டுமின்றி பிராமண மூதாதையர்கள் செய்த தவறை இப்போது எந்த ஒரு இளைய பிராமண தலைமுறையும் செய்வது கிடையாது, அது மட்டுமினறி நெஞ்சை தொட்டுச் சொல்லுங்கள் தற்போது எங்காகிலும் பிராமணர்கள் vs தலித்துகள் பிரச்சினை நடைபெறுகிறதா அல்லது  பிராமணர்கள் தவிர இதர பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட (போராடி பெற்றவர்கள்) சமுதாயத்தின்ர் vs தலித்துகள் இடையே பிரச்சினை நடைபெற்றுக் கொண்டு உள்ளதா? இதை எல்லாம் தெரிந்தும் இன்னும் ஏன் உங்கள் மனதில் இந்த பிராமண துவேஷம் காலம் காலமாகவே ஊறிக் கொண்டு உள்ளது, அடிப்படையில் உளவியல் கோளாறு தான், 
    நீங்கள் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் தற்போது தான் பிராமணர்கள் அல்லாது இதர இனத்தவர்கள் படிப்படியாக அனைத்து துறைகளிலும் உயர் பதவிகளிலும் உயர் நிலைகளிலும் அலங்கரித்துக் கொண்டு உள்ளார்கள், அவர்கள் அனைவருமே இட ஒதுக்கீட்டின் மூலமோ அல்லது அவர்களின் சொந்த திறமையின் மூலமாகத் தானே வெளிச்சத்திற்கு உயர்நிலைக்கு வந்தார்கள், ஆனால் எந்த ஒரு இட ஒதுக்கீடும் இல்லாது இப்போதும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிச்சை எடுத்தாவது உயர் கல்வி கற்று ஒரு நல்ல நிலைக்கு வந்துக் கொண்டு தான் உள்ளார்கள், ஏன் அவ்ர்களிடம் உள்ள ஒரு துடிப்பும் உத்வேகமும் இவ்வாறு துவேஷம் உள்ளவர்களிடத்தில் இல்லை, 
    பொதுவாக ஒரு குற்றச்சாட்டு, பிராமணர்கள் அடுத்தவர்களுக்கு உதவுவது கிடையாது, அவர்கள் சாராரருக்கு மட்டுமே உதவுகிறார்கள், அதனால் தான் இன்றளவும் வேலை வாய்ப்பு கல்வி நிலையில் முன்னேறுகிறார்கள் என்று,  அய்யா இந்த குற்றச்சாட்டை சொல்பவர்கள் சற்றே மனசாட்சியுடன் சிந்தித்து பார்க்கட்டும், பிராமணர்களுக்கு எந்தவிதமான இட ஒதுக்கீடும் கிடையாது, அவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாரும் கிடையாது, கடுமையாக படித்து மதிப்பெண் பெற்றும் இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் கீழ் அவர்களின் இடங்கள் தட்டி பறிக்கப்படுகின்றன, அப்படி இருக்கையில் பிராமணர்கள் எந்த வகையில் அடுத்தவர்களுக்கு உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள், சற்றேனும் சிந்தித்து பாருங்கள், ஆனால் ஒரு கசப்பான உண்மை என்னவென்றால் நிச்சயமாக பிராமணருக்கு பிராமணர் நிச்சயமாக உதவுவது என்பது கிடையாது, அப்படியே இருப்பினும் அவர்கள் உறவினர்களாக மட்டுமே இருப்பார்கள், இது தான் உண்மை, மற்ற வகுப்பினருடன் ஒப்பிடுகையில், 
      ஆனாலும் திராவிட கட்சியினர்கள் ஏற்றி வைத்த காழ்ப்புணர்ச்சி காரணமாக இன்றளவும் இந்த துவேஷ நிலை அனைவரின் மனதிலும் ஆழ படிந்துள்ளது, திரு ஜெயமோகன் ஏற்கனவே ஒரு கட்டுரையில் கூறியுள்ளது போல ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறி உரு ஏற்றி நம் ஆழ்மனதில் நன்றாக படிமம் போல படிந்து விட்டால் அதை திரும்ப பொய் என்று தெரிந்தாலும் நம் மனது அதை ஏற்றுக் கொள்ளாது, ஒரு காலத்தில் மீடியாக்கள், தொலை தூர தொடர்பு வசதி ஏதும் இல்லாத நாட்களில் அவர்கள் கூறிய பொய்யை தொடர்ந்து நம்பிக் கொண்டே இன்னமும் பிராமணர்களை திட்டுவது எந்த அளவுக்கு ஏற்புடையது என்று மனசாட்சியுடன் பேசிக் கொள்ளுங்கள், 
     வேண்டும் என்றோ, அல்லது சாமி குத்தம் வந்து விடும் என்றோ இன்றளவும் மேடையில் முழங்கும் நமது திராவிட பெருந்தகைகள் அனைவ்ரும் திருட்டுத்தனமாக இறை நம்பிக்கையுடன் கோவிலுக்கு சென்று வணங்கி பரிகாரம் தேடிக் கொண்டு அந்தணர்களின் உதவியோடு கடவுளோடு உறவாடிக் கொண்டு உள்ளார்கள். அதே அந்தணர்களும் மேடையில் இப்படி முழங்கி இப்படி மறைமுகமாக ஹோமம் வகையராக்களை செய்யும் திராவிட பெருந்தகைகளை கேள்வி கேட்டோ அல்லது உங்களுக்கு இதுபோல் நாங்கள் செய்து தர இயலாது என்று மறுப்பதோ கிடையாது, காரணம் ஒட்டி பிறந்த வறுமை, பிராமணர் சமுதாயத்தில் எனக்கு தெரிந்தவரை சில குடும்பங்களினை தவிர அனைவரும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பரம ஏழைகள் தான், அவர்களாகவே அவர்களது சுய முயற்சியினாலும், ஒழுக்கமான வாழ்க்கை முறையினாலும் தான் உழைத்து முன்னுக்கு வரும் இனத்தவர்கள் தான், அது அனைத்து பிரிவிலும் இருக்கிறது ஒத்துக் கொள்கிறேன். அப்படி இருக்க பிராமணர்கள் மட்டும் தான் என்று துவேஷ காழ்ப்புணர்ச்சியோடு அணுகுவது இந்த 20ம் நூற்றாண்டிலும் தேவைதானா என்பதை சற்றே சிந்திக்கவும் தோழர்களே 




12 comments:

  1. நல்ல பதிவு. இதை நான் எனது லேட்டஸ்ட் நங்கநல்லூர் பஞ்சாமிர்தத்தில் சேர்த்துள்ளேன், பார்க்க: http://dondu.blogspot.com/2010/07/21072010.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. @திரு டோண்டு சார் , வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி,
    எனது வாழ்க்கையின் சொந்த அனுபவ வேதனை வெளிப்பாடே இக்கட்டுரை
    ராகவேந்திரன்

    ReplyDelete
  3. அய்யா, உங்களிடம் அப்படி காரசாரமாக உரையாடிய நண்பர் நான்தான் என்று சொல்லியிருக்கலாமே (ஓசியில் எனக்கும் விளம்பரம் கிடைத்திருக்கும்.)

    தவிர, மாதவராஜ் அவர்கள் தனது இணையத்தளத்தில் உங்களை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். அவருக்கு நன்றி சொல்லுங்களேன்.

    http://mathavaraj.blogspot.com/2010/07/3.html

    ReplyDelete
  4. @எனக்கு பிளாக் என்றால் என்ன, எப்படி எழுதுவது என்று சொல்லிக் கொடுத்த ஆசான் நீங்கள், உங்களுக்கு நான் விளம்பரம் தருவதா பெத்து, அது தவறு, இருக்கட்டும் கட்டுரைக்கு உங்களின் கருத்து என்ன?

    ReplyDelete
  5. என்ன கருத்து சொல்ல? உங்களிடம் நான் சொல்லவேண்டியதை எல்லாம், நான் ஸ்கைப்பின் மூலம் வீடியோ சாட்டில் உங்களிடம் சொல்லிவிட்டேன். நிற்க, டோண்டு அவர்கள் மேற்கோள் காட்டும் அவளுக்கு அற்புதமாக எழுதுகிறீர்கள். இந்த வளர்ச்சிக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  6. @நன்றி பெத்து இருப்பினும் எனது இடுகைக்கு மூல வித்தே உங்களுடன் நான் திங்கள் இரவு நடத்திய உரையாடல் தான் , இந்த கட்டுரையின் வாயிலாக நான் அன்று உங்களிடம் கூறாததையும் கூறி விட்டேன் என நினைக்கிறேன்

    ReplyDelete
  7. துவேஷம் என்றாலும் காழ்ப்புணர்ச்சியென்றாலும் வெவ்வேறா?

    துவேஷ காழ்ப்புணச்சி என்றாலென்ன?

    ReplyDelete
  8. @வருகைக்கு நன்றி குலசேகரம், விவாதம் செய்ய எனக்கு அவகாசமும், உடன்பாடும் இல்லை ஆகவே உங்களது கமண்டுகளை என்னால் பிரசுரிக்க இயலவில்லை இருப்பினும் உங்களது கோபம் நியாயமானது என்று நான் நம்புகிறேன், எங்களது மூதாதையர்கள் செய்த தவறுக்கு நாங்கள் எந்த வகையில் எப்படி பரிகாரம் செய்ய இயலும், அதை தான் தற்போது அனுபவித்துக் கொண்டு இருப்பதாக நம்புகிறேன், அனுபவித்துக் கொண்டும் இருக்கிறேன், பள்ளிக் காலங்களிலிருந்து, தற்போது என்ன நிலை என்பது தான் எனது கட்டுரையின் மையக் கருத்தாக எண்ணுகிறேன்,ஆனாலும் திருமூலர் கூற்றின் படி மாதா பிதா செய்த பாவம் மகர்க்கு என்ற கருத்தை நான் நம்புகிறேன்

    ReplyDelete
  9. Dear sir
    i have no words to comment,Excellent article.

    ReplyDelete
  10. நல்ல பதிவு, நாம் ஆயிரத்து தொள்ளயிரத்து இருபதுகளில் இல்லை. நம் மக்களில் பெரும்பாலோனோர் நன்கு சிந்திக்ககூடியவர்கள். அருமையான பதிவு . ஸ்ரீதர்

    ReplyDelete
  11. @நன்றி ஸ்ரீதர்,நம் மக்களில் பெரும்பாலோனோர் நன்கு சிந்திக்கக் கூடியவர்கள் என்பதை ஒப்புக் கொள்ளும் அதே நேரத்தில் பிற இனத்தவர்களும் புத்திசாலிகளாக உருவெடுத்து வருவதையும் வரவேற்கிறோம் , அதில் எந்த கருத்து மாறுபாடும் இல்லை, அதை புரிந்துக் கொள்ளாமல் ஏன் இன்னும் துவேஷம் என்பதே எனது கட்டுரையின் மையக் கருத்தாக எண்ணுகிறேன்

    ReplyDelete