Friday, July 2, 2010

பிரேசில் மற்றும் கானாவின் துயரங்கள்

நேற்று நடந்த பிரேசில் - நெதர்லண்ட்ஸ் மற்றும் கானா-உருகுவே போட்டி மிக அருமையாகவும் எதிர்பார்த்த முடிவுகளை தகர்க்கும் வகையில் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் அமைந்தது. 5 முறை உலக சாம்பியன் என்ற பெருமையுடன் களம் இறங்கிய பிரேசில் பல நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய அணி ஆரஞ்சு சட்டை காரர்களுடன் பரிதாபமான முறையில் தோற்றது பிரேசில் ரசிகர்களிடமும் உலகெங்கிலும் உள்ள பிரேசில் அபிமானிகளிடமும் மிகப் பெரிய தாக்கத்தை சோகத்தையும் நேற்று ஏற்படுத்தியது, 

மத்திய கள ஆட்ட்க்காரரான டச்சுக்காரர் மேலே உள்ள Wesley SNEIJDER                            மிக அருமையாக ஆடினார், முதல் பாதியில் பிரேசில் முதல் கோல் அடித்து அவர்களின் ஆதிக்கம் நிறைந்து இருந்த போதிலும் 2ம் பாதியில் ஆரஞ்சு சட்டையின்ர் பிரரேசிலை அடித்து துவைத்து எடுத்து விட்டனர். நம்ப முடியாத அளவிற்கு கோல் அடித்தனர். அதிலும் மேன் ஆப் தி மேட்ச் ஆக தேர்ந்து எடுக்கப்பட்ட வெஸ்லி சென்ஜிடர் பந்தை வசியம் செய்தவாறு தனது வசம் பெரும்பாலும் 2ம் பாதியில் வைத்திருந்தார் , மிக அழகாக அடுத்தவர்களுக்கு பாஸ் செய்தார், தனக்கு வந்த வாய்ப்புகளையும் தவறவிடாது விளையாடினார். 
2வது மேட்சான கானா-உருகுவே அணிகளுக்கு இடைய நேற்று நடைபெற்ற மேட்ச் ஜப்பான் -போர்ச்சுகல் மேட்ச் போலவே பெனால் டி ஷீட் அவுட் முறையில் கானாவின் கனவை காணாமற் போக வைத்தது, அதிலும் கானா அணியின் நட்சித்திர வீரர் கியான் அழுது அவரை சமாதானம் செய்ய வைப்பதற்குள் ஏனைய வீரர்களுக்கும் கோச்சுக்கும் பெரும்பாடாக போய் விட்டது, மிக அருமையாக விளையாடினார்கள் கானா வீரர்கள், என்ன செய்ய அதிர்ஷ்ட தேவதை அவர்களுக்கு கைகொடுக்கவில்லை, பெனால்டி ஷீட் அவுட் -ல் கியான் அடித்தது வெளியே கோலாகமாற் போனதுஅவருக்கு வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வாக உறுத்திக் கொண்டு இருக்கும் , அதேபோல உருகுவேன் மத்திய கள ஆட்டக்காரரான எகிடோ ஆரிவேலாவின் ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது, வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது, பரபரப்பாக விளையாண்டார் ஆட்டம் முழுவதும், அதேபோல் நேற்றைய போட்டியின் மேன் ஆப் தி மேட்சாக தேர்ந்து எடுக்கப்பட்ட 


டீகோர் போர்லேன் மிக அருமையான தனது ஆற்றலை வெளிப்படுத்தினார், பார்க்கலாம் இன்று எனது பேவரிட் டீமான அர்ஜெண்டினா என்ன செய்கிறது என்று 






No comments:

Post a Comment