Wednesday, July 21, 2010

கதம்பம்

நேற்று எனது துணைவியார் (தனியார் மெட்ரிக் பள்ளி மேல்நிலை கணித ஆசிரியை) என்னுட்ன் பகிர்ந்துக் கொண்ட சில விஷயங்கள்
சம்பவம் -1.
4ம் வகுப்பு மாணவன் Revision Exam எழுதி முடித்தவுடன் தேர்வு முடியும் நேரத்திற்கு முன்பாக பேப்பரை கட்டு கட்டி என்னை வெளியே விடுங்கள் என்று கூறியுள்ளான்  சம்மந்தப்பட்ட அறையில் Exam Duty பார்த்த ஆசிரியையிடம், 12.30 மணிக்கு முன்பாக அனுமதிக்க இயலாது என கூறி விட்டார், பேப்பரை மேலே தூக்கி போட்டுவிளையாடி அடுத்தவருக்கு தொந்திரவு செய்து வந்துள்ளான் அச் சிறுவன், அரசாங்க கட்டுப்பாடுகளுக்கு பய்நது அந்த ஆசிரியை அடிக்காமல் முடிந்தவரை சமாளித்துள்ளார். தேர்வு நேரம் முடிந்தவுடன் அச் சிறுவன் நேராக பிரின்ஸிபலிடம் சென்று எனது ஆன்சர் பேப்பரை அனைத்து மாணவர்களுக்கும் டெஸ்கில் மேல் ஏறி காண்பித்தேன் அவர்களும் காப்பி அடித்து எழுதினார்கள், அதை கண்காணிக்கும் ஆசிரியை கண்டுக் கொள்ளவே இல்லை, அந்த ஆசிரியையின் மீது நடவடிக்கை எடுங்கள் என்று புகார் கூறி உள்ளான், அதையும் நம்பிய பிரின்ஸிபல் சம்மந்தப்பட்ட ஆசிரியை கண்டித்துள்ளார். பிறகு நடந்த விஷயம் கேள்விப்பட்டதும், புஷ்பா தங்கதுரை எழுத்து போல நே என்று விழித்தார் என்பது வேறு விஷயம். 
சம்பவம் -2. 
    பள்ளி பேருந்தில் செல்கையில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் அவனின் புத்தக மூட்டையை வேண்டும் என்றோ அல்லது ரூம் போட்டு யோசித்தோ ஒரு ஆசிரியையின் மேல் பொத்தென்று போட்டு விட்டான். அந்த ஆசிரியை வலி தாளாமல் சீ போடா என்று கூறியிருக்கிறார். மறுநாள் சம்மந்தப்பட்ட புத்திரனின் பெற்ற சிகாமணிகள் பள்ளி திரண்டு வந்து எப்படி எங்களது அருமை மகனை சீ போடா என்று கூறலாம், சீய் போங்கள்டா என்று தானே கூறி இருக்க வேண்டும், இது தான் ஒழுக்கமா என்று சீறி பொங்கி எழுந்துள்ளனர், பிரின்ஸிபல் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர், வீரப்பன் என்று கூறாமல் வீரப்பர் என்று கூற வேண்டும் என்று கூறினார்கள் அந்த வழி வந்த பரம்பரை போலும், 
டிஸ்கி- இதிலிருந்து கிடைக்கும் நீதி என்னவென்றால், இந்த காலத்து குழந்தைகளை சமாளிக்க இறைவன் அதீத புத்தியுடன் ஆசிரியர்களை படைக்க வேண்டும் போல 





3 comments:

  1. உங்கள் பதிவு நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. @ தங்கள் வருகைக்கு நன்றி எஸ்.கே.

    ReplyDelete
  3. //இதிலிருந்து கிடைக்கும் நீதி என்னவென்றால், இந்த காலத்து குழந்தைகளை சமாளிக்க இறைவன் அதீத புத்தியுடன் ஆசிரியர்களை படைக்க வேண்டும் போல // சரியாகச் சொன்னீர்கள் ராகவேந்திரன். பள்ளி விடும் நேரம் பஸ்ஸில் பத்து பனிரெண்டு வயது சிறுவர்கள் போடும் கூச்சலும், படியில் ஏறி இறங்கி சீட்டில் அமர்ந்திருப்பவர்களின் பிபி எகிறும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள். டிரைவர்கள் கண்டக்டர்கள் கண்டித்தால் அடுத்த ஸ்டாப்பில் இறங்குவது போல் பாவனை செய்துவிட்டு மீண்டும் படியில் தொங்கிக் கொண்டே வருகிறார்கள். இவர்கள் தானியியங்கி கதவுகள் இருக்கும் பேருந்துகளில் ஏறுவதில்லை...இவர்களை எல்லாம் வீட்டில் எப்படி சமாளிக்கிறார்களோ என்றும் தெரியவில்லை....
    அருமையான பதிவு..பகிர்விற்கு நன்றி

    ReplyDelete