Tuesday, July 6, 2010

ஆரஞ்சு அற்புதம்

டச்சுக்காரர்கள் நேற்று மிக அருமையாக ஆடி இறுதி போட்டிக்கு தேர்வு ஆகி உள்ளனர். உருகுவே அணியும் கடுமையாக போராடி தோற்று விட்டது , 3-2 என்ற விகிதத்தில் அதிலும் கடைசியாக சொட்டை தலையர் Arjen ROBBEN தலையில் முட்டி கோல் அடித்து விட்டு தலையை தடவிக் கொண்டே மைதானத்தை வலம் வந்தது தான் மிகப் பெரிய ஹைலைட், வயதானவர் போலும் ஆனால் மிகுந்த தீரத்துடன் விளையாடினார், நேற்று எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல http://sramakrishnan.com/view.asp?id=426&PS=1  விளையாட்டு முடிந்தவுடன் கூட அதை பற்றிய நினைவுகள் அகல மறுத்துவிட்டது, இரவு 3 மணிக்கு மேல் ஆகி விட்டது, ஆனாலும் சுகமான நினைவுகளுடன் உறங்கச் சென்றேன். கடந்த 1978க்கு பிறகு நெதர்லாந்து இறுதிபோட்டிக்கு இப்போது தான் தகுதி பெற்றுள்ளது. அநேகமாக இன்று ஜெர்மனி ஜெயிக்கும் என்பது எனது நம்பிக்கை, பார்க்கலாம் , நேற்று பலமுறை நடுவர் வீரர்களுக்குள் களத்தில் நடந்த மோதலை கண்டுக் கொள்ளவில்லை, போதும் போதும் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறாய் போலும் என விளையாட சொல்லிக் கொண்டு இருந்தார். அதிலும் குறிப்பாக டச்சு வீரர் ஒருவரின் தாடையை பெயர்த்து விட்டார் உருகுவே கோபம் வந்து டச்சு வீரர் 10ம் நெம்பர் ஆட்டக்காரர் 

Wesley SNEIJDER கோபம் வந்து உருகுவே வீரரின் பின்புறம் ஓங்கி அடிக்க ஒரே ரணகளம் தான், எது எப்படியோ மிக அருமையான மேட்ச் கண்டு களித்த திருப்தி, 

வெற்றி களிப்பில் நெதர்லாந்து நாடு மூழ்கி உள்ளது 



No comments:

Post a Comment