Friday, July 16, 2010

போலியோ போலி

எங்கள் கிராமப் பகுதிகளில் மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளுக்கு பொங்கல் சாப்பிடக் கொடுக்கும் போது சுற்றி உள்ள சிறுவர்கள், பொங்கலோ பொங்கல், போலியோ போலி என உற்சாக குரல் எழுப்பு மாடுகளுக்கு பொங்கல் கொடுப்பார்கள், நிச்சயமாக இது அந்த போலி கிடையாது, நமது கழக ஆட்சியில் கடந்த 1 வருட காலமாகவே பெருகியிருக்கும் போலிகளின் உச்ச கட்டம் தான் கடந்த 2 நாட்களாக செய்திதாள்களில் சீரழியும் போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம், 
   இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளி நாய்கள் அனைவரும் தலைமையாசிரியர் பொறுப்பு வகிப்பவர்கள், அரசாங்க மதிப்பெண் பட்டியல் அச்சடிக்கும்பிரிவில் பணியாற்றும் நபர்கள் போன்ற பிரகிருதிகள் தான், இந்த பரதேசிகளுக்குத் தான் நமது தமிழக முதல்வர் ஆறாவது சம்பள ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் ஊதியம் + அரியர் போன்றவற்றை போன 2 வருடங்களுக்கு முன்பு தான் ஏற்றியுள்ளார். அப்போதும் போதாத பிரகஸ்பதிகள் இவ்வாறு எல்லாம் சம்பாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். கடுமையான தண்டனைகள் மூலம், அவர்களை தண்டிக்கா விடில் எதிர்காலம் நம்மை கண்டிப்பாக மன்னிக்காது, படித்து முன்னேற துடிக்கும் ஒரு சிறப்பான எதிர்கால சந்ததியனரின் சாபத்துக்கு ஆளாகாதீர்கள், எவ்வளவு சிரமப்பட்டு , நமது எதிர்காலம் வாழ்க்கை பிரகாசமாக இருக்க வேண்டும் என படிக்கும், படித்து முடித்து வேலையை எதிர் நோக்கி காத்திருக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் இச் செய்தியை படித்து மிகவும் சொல்லாணாத வேதனை அடைந்துள்ளனர். அது மட்டுமின்றி சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு 5 வருட பரிட்சை எழுத முடியாத தண்டனை மட்டும்போதாது, அவர்களுக்கு ஆயுள் காலம் முழுவதும் இனி தேர்வு எழுத முடியாத வரையில் தண்டனை கடுமையாக தர வேண்டும், அவர்களின் பெற்றோர்களுக்கு உடந்தையாக இருந்த காரணத்தினால் பணம் கொடுத்த காரணத்தினால் அவர்களுக்கும் தண்டனை தர வேண்டும், 
         எதிர் பார்த்தாலும் ஊழல் திளைந்தோங்குகிறது, ஆனால் நமது ஆட்சியாளர்கள் வெட்டி பெருமை பேசி தமிழ் செந்தமிழ், கருந்தமிழ் என்று காலத்தை கடத்தி வருகிறார்கள், யாருக்கும் இதைபற்றிய சொரணை கிடையாது, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வு கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்று இன்றைய தினமான 17.7.2010ம் தேதி வரை அதில் நடைபெற்ற ஊழல் வெளிச்சத்திற்கு வந்ததின் காரணமாக முதல் பட்டியல் தவறு என்றும், இரண்டாம் பட்டியலில் நிறைய வித்தியாசங்கள் என்று வந்தும், விடைகளினை இணைய தளத்தில் வெளியிட்டும், சிலர் நீதிமன்றங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தும் இன்னமும் பணி வாய்ப்பு கிடைக்காமல் எத்தனையோ இளைஞர்கள் கொந்தளித்தும் குமுறியும் வருகின்றனர், யாருக்கும் வெட்கம் கிடையாது, கை நீட்டுவதற்கு, இதுபோன்ற அரசு அதிகாரிகளையும், ஊழல் செய்பவர்களையும் ஒரு கப்பலில் ஏற்றிக் கொண்டு போய் அரபிக் கடலில் சுறா மீன்களுக்கு இரையாக்கினால் கூட தேவலை 



No comments:

Post a Comment