Tuesday, August 9, 2011

ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு கடிதம்

டியர் சார், நலம் நலமே விழைக ,
தம்மம்பட்டியிலிருந்து ராகவேந்திரன்,
மகேஷ் சாரின் கடிதத்திற்கு (கடைசி) விளக்கம் அளிக்கலாமா வேண்டாமா என்ற நெடிய குழப்பத்திற்கு பிறகு விளக்கம் அளிக்கலாம் என்று எண்ணியே இக்கடிதம்
வீம்பு பாராட்டவோ அல்லது எதிர் வினைக்கு எதிர் வினை என்று எண்ணவோ வேண்டாம்,  தாங்கள் கூறியவாறு ஆசிரியர்கள் தங்களை தர்ங்களே கீறி பார்த்துக் கொள்ளவும் ஒரு சுவர் எழுத்தாகவும் சீனிவாசனின் மரணத்தை எதிர்கொள்ளாமல் சப்பைக்கட்டு கட்டிக் கொண்டு உள்ளார்கள் என்று ஆதங்கத்தின் விளைவு.
நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தில் பெரும்பாலான பகுதிகளை ஒதுக்கி தள்ளி விட்டு அவருக்கு பதில் அளிக்க தெரிந்த இரண்டு பத்திகளை மட்டும் அவர் நையாண்டி என்று எழுதியிருப்பது உண்மையிலேயே நையாண்டித்தனம் தான்.
சரி விஷயத்துக்கு வருவோம்.
பள்ளிக்கு சென்று புரவலராக ரூ1000/- செலுத்தி கேள்வி கேளுங்கள் என்று கூறுகிறார். நியாயம் தானே, இவர்கள் யூனியன் மீட்டிங்கில் நியாயவான் வாத்தியார்கள் அதாவது நமது மகேஷ் சார் போன்றவர்கள் மற்ற ஆசிரியர்களுக்கு இந்த நியாயத்தை எடுத்துக் கூறலாமே, மாலை 4.00 மணி ஆனவுடன் ஒவ்வொரு தேநீர் கடையிலும் குறைந்தது 20 ஆசிரியர்கள் குழுமி அரட்டை அடித்து இரவு 9 மணிக்கு கலைந்து செல்கிறார்களே அங்கு இதை பற்றி ஆரோக்கியமான முறையில் விவாதிக்கலாமே, அங்கு விவாதிக்கும் ஒரே கருப்பொருள் என்ன தெரியுமா, டி ஏ என்னவாயிற்று, அரியர்ஸ் என்னவாயிற்று சம்பள கமிஷன் என்னவாயிற்று, பென்ஷன் என்னவாயிற்று , எத்தனை சதவிகிதம் பஞ்சப்படி ஏற்றப்படும் என்பது மட்டுமே,
எனக்கு தெரிந்த வரை பொதுப்படையாகத் தான் எழுதுகிறேன், தாங்களும் அவ்வாறே அக்கட்டுரையில் எழுதியிருக்கிறீர்கள் என நம்புகிறேன். மேலும் மென் பொறியாளர்கள் அனைவரும் திறமையாக பணியாற்றினால் தான் அடுத்த மாதம் வேலையேஇருக்கும் பணி பாதுகாப்பு என்பது சுத்தமாக கிடையாது, அடுத்த மாதம்வேலையில் இருப்போமோ இல்லையா என்று அவர்களுக்கு தெரியாது, ஆசிரிய பெருந்தகைகள் போல வேலையில் சேர்ந்த நாள் முதல் தேய்ந்து ரிட்டயர்ட் ஆகும் கடைசி நாள் வரை ஒரே பள்ளியில் ஒரே நாற்காலியில்  தேய்த்துக் கொண்டு இருக்க இயலாது, ஆதலால் தயவு செய்து அவர்களுடன் ஒப்பிடுவது மிகவும் அபத்தமானது. அதுபோல் எந்த ஒரு அரசு ஊழியரும் கைது என்று பேப்பரில் வந்தால் இதே ரூ. 100/- லஞ்சம் கொடுத்து காத்திருக்கும் அப்பாவி பொது ஜனம் மகிழ்ச்சியடைவதோடு நின்று விடுகிறது. அவர்களிடம் வீரம் காட்ட இயலாது ? ஏன் என்றால் சாமான்யர்கள் அங்கு தான் கைகட்டி நிற்க வேண்டும். மேலும் அவர் தெரிந்து ஒரு உண்மையை ஒத்துக் கொண்டு உள்ளார். இன்னும் சிறிது காலங்களில் ஆரம்ப பள்ளி இருக்காது , ஏன் என்றால் மாணாக்கர்கள் எண்ணிக்கை அட்மிஷன் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு என்ன மூல காரணம் ஆசிரியர்களின் சுணக்கமின்மை மட்டுமே காரணமாக இருக்க இயலும், நான் மீண்டும் ஆனித்தரமாக கூறுகிறேன். எனது நண்ப்ர்கள் ஆசிரியர்கள் பலர் தனது சொந்த பிஸினஸ் பார்த்துக் கொண்டு தான் வேலை பார்க்கும் பள்ளியில் அவர்கள் சம்பளம் கொடுத்து படித்த வேலையற்ற இளைஞர்களை கொண்டு பாடம் எடுக்கச் சொல்கின்றனர். இது சத்தியம், மேலும்,  பள்ளியை தத்து எடுத்துக் கொள்ளலாம், அங்கு போய் கவனிக்கலாம், எங்களை   குறை கூறுவதை விட்டு விட்டு என்று கூறும் ஆசிரியர்கள் அவர்களுக்குள்ளாகவே ஒரு குழு அமைத்து உதாரணத்திற்கு சார் குறிப்பிட்டுள்ளது போல் அந்த இரு பள்ளி ஆசிரியர்கள் அவர்களின் அருகில் இருக்கும் பள்ளிகளுக்கு சென்று இந்த நிலையை எடுத்து கூறி எங்கள் பள்ளிகளை போல் நீங்களும் உங்கள் பள்ளிகளில் பாடுபடுங்கள், உங்கள் பள்ளிகல்வியின் தரத்தை உயர்த்துங்கள் என்று அறிவுறுத்தலாமே,  அது மட்டுமின்றி உங்களை குறை  கூறி எங்களுக்கு என்ன பிரயோஜனம், உங்கள் மீது சமுதாயத்திற்கு தனிப்பட்ட விரோதம் கிடையாது. அதை நன்கு மனதிற் உணருங்கள்.   அதுபோல் ஆசிரியர்களை கடலில் தள்ளுவேன்என்பது ஒரு கோபத்தில் எழுந்த சொற்றொடர் , நிச்சயமாக கடலில் தள்ளும் எண்ணம் எனக்கில்லை. பாவம் மீன்கள் மீது எனக்கு என்ன கோபம்.இவர்களை தின்னும் மீன்கள் இவர்களை போல் மாறி விட்டால் அந்த பாவம் என்னையல்லவா சேரும். ஆசிரியர் மட்டும் படித்தவன் அல்ல என்கிறார். ஆனால் எதிர்கால தலைமுறையை உருவாக்கும் பெரிய பங்கு இவர்களிடம் மட்டுமே நமது சமுதாய அமைப்பு கொடுத்துள்ளது. 1 ரூபாய் தட்டுப்பாடு என்னால் நீங்கியது என்று பகடி செய்திருக்கிறார். வாழ்த்துக்கள், அதே பகடிக்கு எதிர்பகடி யாக இப்படியும் கூறலாம். சார், எத்தனை ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு அந்த ஏடிஎம்-ல் தன்னுடைய சம்பளத்தை முறையாக எடுக்க தெரியும் என்று கூறுங்கள், வெளியே நிற்கும் வாட்ச்மேன் உதவியில்லாமல், மீண்டும் ஒரு முறை இந்த கடிதத்தின் வாயிலாக தெரிவிப்பது என்னவென்றால் தனிப்பட்ட முறையில் எந்தவொரு கோபமும் ஆசிரிய சமுதாயத்தின் மீது கிடையாது. அவர்களாகவே அவர்கள் மனதை தொட்டு தெளிந்துக் கொள்ளவே தாங்கள் பனைமரத்துப்பட்டி சீனிவாசன் மரணம் ஒரு சுவர் எழுத்து என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். அதன் விளைவே இக்கடிதம்
போன கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு என்னால் ஆன மேலும் சில எளிய யோசனைகள்.
1) ஒவ்வொரு பொது தேர்வின் போது 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாடம் மாணவர்கள் தேர்வு எழுதும் போது ஆசிரியர்களும் பொது தேர்வு எழுதி அத் தேர்வில் 90 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் குறைந்தால் அடுத்த வருடம் வேலை கிடையாது என்று ஒரு அரசாணை வெளியிட்டால் நலம்,
2) மேலும் அந்த தேர்வு முடிவுகளை பகிரங்கமாக பள்ளி அறிவிப்பு பலகையில் மாணாக்கர் பார்க்கும்வகையில் ஒட்டப்பட வேண்டும்.

தோழமையுடன்
ராகவேந்திரன்,தம்மம்பட்டி


1 comment:

  1. தயவு செய்து பத்திகளை அதிகமாக்குங்கள், பத்திகளுக்கிடையே இடைவெளியும் விடுங்கள்.

    இல்லாவிட்டால் வாக்கியங்களை படிக்காமல் தாவும் நிலைமை ஏற்படுகிறது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete