Tuesday, February 4, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு-யாருக்கும் வெட்கமில்லை.

அன்பு தோழமைகளுக்கு, கடந்த 3 வருடங்களாக எனது பிளாக்கில் எந்தவிதமான கட்டுரையும் எழுதவில்லை, வேளை பளு காரணமாக , இனி எழுதலாம் என எண்ணி இக்கட்டுரையுடன் துவங்குகிறேன். 
    நேற்று தமிழக முதல்வர் ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண்கள் தளர்வு குறித்த அறிவிப்பு அனைவருக்கும் தெரிந்ததே. 
   
எனக்கு அடிப்படையாக சில கேள்விகள் இது குறித்து எழுகின்றன. 
  • இந்த மதிப்பெண் தளர்வு 2013 தேர்வுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார். 
  • தகுதி தேர்வானது கடந்த 2 வருடங்களாக தான் நடைபெறுகிறது. 2012 தேர்வு எழுதியவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? 
  • மேலும் முதல் தகுதிதேர்வு 1.30 மணி நேரம் மட்டுமே. அப்போது நேரம் போதவில்லை என்று புகார் எழுந்தவுடன் தற்போது 1.00 மணி நேரம் அதிகரித்துள்ளார்கள். அப்போது 1.30 மணி நேரத்தில் தேர்வு எழுதி 90 மதிப்பெண்கள் எடுக்கத் தவறியவர்கள் இப்போது 83 எடுத்தவர்களைவிட திறமையில்லாத ஆசிரியர்களா? 
  • மேலும் தகுதி தேர்வு விளம்பரம் நாளிதழ்களில் வெளியாகும் போது இதுபோல் இடஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்ச்சி என்று அறிவித்திருந்தால் அது நேர்மையான தேர்வாக கருதலாம். 
  • பந்தயத்தின் முடிவில் வெற்றியும் அறிவித்து விட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடித்த பிறகு கடைசியாக வந்தவர்களும் தகுதியானவர்கள் என்று அறிவிப்பது முற்றிலும் அநீதியானது, இயற்கை நியதிக்கு மாறானது. 
  • இந்த தேர்விற்காக கணவனை மறந்து குழந்தைகளை மறந்து படித்த ஆசிரியர்கள். தனியார் பள்ளியின் வேலையை துறந்து முழுமூச்சாக படித்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள், இவர்கள் அனைவரின் கனவுகளும் என்னாவது - இவர்கள் திரும்பவும் அந்த தனியார் பள்ளியில் வேலைக்கு சேர இயலுமா? 
  • வாக்கு வங்கி அரசியலுக்காக ஒரு விநாடியில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு எடுப்பது என்ன நியாயம்? 
  • 2.2.2014ம் தேதி சட்டமன்றத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கூறிய பொன்மொழிகள் என்ன தெரியுமா? அரசின் கொள்கை என்பது தரமான ஆசிரியர்கள், இதில் மதிப்பெண் தளர்வு என்பது கிடையாது. 90 மதிப்பெண்ணுக்கு மேல் தான் இட ஒதுக்கீடு என்று சூளுரைத்தார். அடுத்த நாள் தமிழக முதல்வர் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இடைப்பட்ட 24 மணி நேரத்தில் தமிழக அரசு தரமான ஆசிரியர்கள் தேவையில்லை, தரமில்லாத ஆசிரியர்கள் கிடைத்தாலே போதும் என்ற நிலைக்கு வந்து விட்டதா என்ன? 
  • ஏற்கனவே இடைநிலை ஆசிரியர்களில் காலிபணியிடம் 2000க்கு 18000க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். 
  • பி.எட். பட்டதாரி ஆசிரியர்களில் 14000 காலிபணியிடங்களுக்கு 19000 க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். 
  • தற்போது இந்நிலையில் கூடுதலாக இன்னமும் 30000 முதல் 40000 வரை தேர்ச்சி பெற இயலும், அடுத்த வருடம் இன்னமும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் இவர்களுக்கு வேலைக்கு உத்திரவாதம் உண்டா? 
  • ஏற்கனவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே போகும் நிலையில் இவர்களின் எதிர்காலம் கேள்விகுறிதானா? 
  • எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறுகிறார்கள். 
  • வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டோர்கள் அனைவரும் வாக்களித்து தானே தீர வேண்டும். 
  • வழக்கம் போல அனைத்து மக்களும் இடஒதுக்கீடுக்கு கிடைத்த வெற்றி என்றும் சமூக நீதி காத்த வீராங்கனை என்றும் பட்டம் அளித்து மகிழ்வார்கள். நாமும் அதை ரசிப்போம்
  • அன்புடன்-துர்வாசர்,தம்மம்பட்டி


        


No comments:

Post a Comment