கடந்த 15நாட்களாக நமது இடது / வலது காம்ரேட்டுகள் செய்யும் அழிச்சாட்டியங்களுக்கு கொஞ்சமும் அளவல்ல, விலைவாசியை எதிர்த்து நாடு முழுவதும் கன்டன ஆர்ப்பர்ட்டம், கேரளாவில் பந்த், கொல்கொத்தாவில் பந்த் என்று இல்லாத படம் காட்டிக் கொண்டு உள்ளனர்.
அய்யா திரைமறைவில் பெட்டி வாங்கிக் கொண்டு விட்டு வேண்டிய மட்டும் விலையேற்றத்தை ஏற்றிக் கொள் , நாங்கள் ஊரை ஏமாற்ற எங்கள் பிழைப்பு நடக்க பந்த் என்னும் நாடகத்தை அரங்கேற்றிக் கொள்கிறோம் என்கின்றனர். இவர்கள் செய்யும் கூத்துகளுக்கு த்குந்த பாடம் தேர்தலில் மக்கள் புகுத்துவார்கள் அய்யா, இவர்கள் இஷ்டத்திற்கு மான்யம், தள்ளுபடி, என்று அறிவிக்க வேண்டியது, மற்றொரு புறம் வரலாறு காணாத விலையேற்றம் ஏற்படுத்தி சாமான்யர்களை துன்புறுத்துவது, இது என்ன காடா இல்லது நாடா என்றே தெரியவில்லை, இவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கும் அளவில்லை. வழக்கம் போல் அனைத்துக் கட்சிகளும் இதற்குஎதிர்ப்பு தெரிவிப்பதோடு அவர்கள் கடமை தீர்ந்து விட்டது. வழக்கம் போல நமது தானைத் தலைவர் திரு மு.க. அவர்கள் 2சதவீதம் வரியை குறைத்து விட்டேன் ஏதோ என்னால் முடிந்தது, அதனால் எஙகள் தமிழ்நாட்டிற்கு இவ்வளவு நஷ்டம், இருந்தாலும் மக்கள் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம் என்று இவர்கள் ஒரு நாடக காட்சியை அரங்கேற்றி விட்டனர். இது என்ன கொடுமை சார், இவர்கள் ஆதரவில் தானே மத்திய ஆட்சியே நடக்கிறது. விலையேற்றத்தை தவிருங்கள் இல்லை என்றால் ஆதரவு வாபஸ் என்று அறிவிக்க திராணி உள்ளதா, இல்லை எந்த கட்சிக்காவது தேர்தலை சந்திக்க தான் தைரியம் உள்ளதா,
மக்களின் தலையெழுத்து இந்த கூத்தையெல்லாம் சகித்து வாழ வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment