வருடம் தவறாது பருவமழை பெய்கிறதோ இல்லையோ, இந்தியா முழுவதும் அங்கெங்கும் காணாதபடி நகரமோ, சிறு நகரமோ, பெரு நகரமோ அனைத்து இடங்களிலும் குண்டு மழை மட்டும் பொழிந்த வண்ணம் உள்ளது.
ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பிற்கு வழக்கம் போல அரசு இயந்திரங்கள் வந்தேறின, முதல்வர் அவரது பரிவாரங்களுடன், சோனியா அவரது பரிவாரங்களுடன் வந்து ஆறுதல் கூறியாகி விட்டது , வாய்க்கு அரிசி போல் குடும்பத்திற்கு ஒரு தொகை கொடுத்தாகி விட்டது. வேறு என்ன வேண்டும் வழக்கம் போல் அனைத்து மக்களும் செயல்பட வேண்டியது தான் பாக்கி, மீடியாக்களும் வழக்கம் போல ஜெய்ப்பூர் மீண்டு எழுந்து விட்டது துயரத்தை மறந்து விட்டனர் என்று முழக்கமிட்டு விட்டன. நாமும் வழக்கம் போல் இதை மறந்து ஐபி்எல் மேட்ச் -ல் டோனி எவ்வளவு அடித்தான் என்று இரவு 12 மணி வரை கண் விழித்திருந்து பார்த்து விட்டு வழக்கம் போல் இட்லி சாம்பார் வடை தின்று விட்டு படுக்கச் சென்று விடுவோம். வீதியில் இப்படி அனாதைகளாக சாகதான் இந்தியாவில் பிறந்தாமோ நாம், ஏன் ஒருவருக்கும் சொரணையே இல்லையா என்ன?
நாம் பார்த்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்த நாடு, இல்லையேன்றால் அன்றே பங்களாதேஷ் அழிந்திருக்கும், அங்கிருந்து, தீவிரவாதிகள் ஊடுருவி்யிருக்கிறார்கள் என்று துப்பு துலக்கிக் கொண்டே இருப்பார்கள் இந்த துப்புக் கெட்ட ஜென்மங்கள், என்ன நியாயமோ இவர்களுக்கு தெரியவில்லை, அப்பாவி பொது மக்களின் உயிருக்கு இந்தியாவில் மதிப்பே இல்லையா என்ன? அரசியல் வாதிகள் குண்டு வெடிப்பில் இறந்தால் தான் மதிப்பா என்ன,
மேலும் துப்பு கெட்ட உளவுத் துறை ரேடார் கண்காணிப்பில் வராத நகரங்களாக பார்த்து தீவிரவாதிகள் குண்டு வைக்கிறார்கள் என்று ஈனஸ்வரத்தில் முணகியிருக்கிறார்கள். தீவிரவாதிகள் என்ன கேணயர்களா, ரேடாரில் தெரியும் பெரு நகரங்களிலா தொடர்ந்து குண்டு வைப்பார்கள், அவர்கள் எங்கு வேண்டுமானலும் குண்டு வைப்பார்கள் உசிலம்பட்டியிலும் குண்டு வைப்பார்கள், உடுப்பியிலும் வைப்பார்கள், ஜெய்ப்பூரிலும் வைப்பார்கள், என்ன செய்ய இந்தியாவில் பிறந்த ஒரே காரணத்திற்காகவும் இவ்வாறு போலி மதச்சார்ப்பின்மை என்று பேசிக் கொண்டிருக்கும் கேவலமான நாட்டில் இருப்பதால் சகித்துக் கொள் என் அருமை நண்பர்களே
ஒவ்வொரு முறை குண்டு வெடிப்பின் போது பிரதமர் முதற் கொண்டு ஜனாதிபதி வரை லோக்கல் கவுன்சிலர் வரை இது வன்மையாக கண்டிக்கத் தக்கது என அறிக்கை விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஏனோ குண்டு வெடிப்பு பக்கத்து நாட்டில் நடந்தது போல, அவர்களை பார்த்து நான் ஒன்று கேட்கிறேன். நமது வீட்டில் ஒரு திருட்டு நடந்தது என்றால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல் நிலையம் சென்று புகார் செய்யாமல் திருடன் யார் என தெரிந்தும் அவனை கண்டிக்காமல் நான் அவனை வண்மையாக கண்டிக்கிறேன் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருப்பீர்களா என்ன, இது ஒரு வீட்டுக்கே பொருந்தும் என்றால் நாடும் நமது வீடு தான் அய்யா, உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட உணர்வே இருக்காத, செப்டம்பர் 2002க்கு பிறகு அமெரிக்காவில் ஒரு சிறு குண்டு வெடிப்பு கூட நடந்தது இல்லை. ஏன் அவர்கள் திருப்பி அடித்ததால் தான், அய்யா இங்கிருந்து உடனே பங்காளதேஷ் சென்று இரண்டு நகரங்களை நாசமாக்கியிருந்தார்கள்் அவர்கள் உடன் நடவடிக்கை எடுப்பார்கள். அல்லது நாசகாரர்களை அடையாளம் கண்டு வளரவிடாமல் தடுப்பார்கள். ஆனால் நாம் தான் பாரதி சொன்னது போல் வாய்ச் சொல் வீரராயிற்றே, அறிக்கை மூலம் கண்டித்துக் கொண்டிருப்போம். மேலும் வரும் பாகிஸ்தான் பேச்சு வார்த்தையின் போது இதைப் பற்றி பேசுவோம் என்று முழங்கியிருக்கிறார்கள். என்ன கொடுமை சார், இப்போது தான் பேசப் போக்கிறார்களாம், கடந்த பல வருடங்களாக குண்டு வெடித்துக் கொண்டே உள்ளது. பேசி என்ன கிழித்தீர்கள், அய்யா,வல்லான் வகுத்ததே வாய்க்கால்,அமெரிக்கா வில் நடந்த குண்டு வெடிப்பின் பயனாக அமெரிக்காவில் உள்ள அனைத்து மக்களுமே பொங்கி எழுந்து புஷ்ஷின் பின்னால் வழி வகுத்து உடனடியாக குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என முஷ்டியை மடக்கி முழங்கினாரே அந்த தைரியம் சொரணை நமக்கு எப்போது வரும்
கேட்டால் எங்கிருந்தாலும் வந்தாகி விடும் இந்த மதச்சார்பின்மை என்ற மாயப் பிசாசு, அய்யா கனவான்களே பலியாவது நமது இந்திய தாயின் புதல்வர்கள், உனது சகோதரன், மற்றும் எனது அம்மா, மற்றும் எனது குழந்தைகள், அப்பாவிகள் என்ன பாவமடா செய்தார்கள், கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாது குண்டு வெடித்துக் கொல்கிறார்கள். ஆனால் இதற்கு எல்லாம் நம்மிடம் எந்த ஒரு பதிலடியும் கிடையாது . பாதகம் செய்வாரை கொண்டு பயம் கொள்ளாதே, என்றான் பாரதி காறி உமிழ்ந்து விடு மோதி விடு என்றான். அய்யா ஒரு முறையேனும் திருப்பி பதிலடி தாருங்கள் அறிக்கையே விட்டுக் கொண்டு இருக்காதீர்கள். எங்களுக்கும் அடிக்கவும் தெரியும் என்று உணர்த்துங்கள்,
இல்லையேல் எதிர்காலம் உங்களை நிச்சயம் மன்னிக்காது
வருங்கால வரலாறு உங்களை பார்த்து கைகொட்டி சிரிக்கும்
-துர்வாசர்
No comments:
Post a Comment