ஆயிற்று மீண்டும் ஒரு சீசன் களை கட்ட துவங்கியாவி விட்டது. வேறு என்ன பள்ளி கல்லூரிகளுக்கு ஆள் பிடிக்கும் வேலையைத் தான் கூறுகிறேன்.
கல்வித் தந்தைகளும், கல்வி வள்ளல்களும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்மாக எங்கள் பாடசாலைக்கு வாருங்கள் அனைத்தும் இலவசம் தரமான கல்வி மேலைநாட்டுக்கு இணையானது, பாத்ரூம் லெட்ரின் முதற்கொண்டு கணினி மயம், (அங்கு எப்படி கணிணி மயமாக்கினார்கள் என தெரியவில்லை) என்று ஒரு பீற்றல் விளம்பரங்கள். ஆனால் அங்கு சென்று பார்த்தீர்களானால் கூறைகொட்டாய் தான் இருக்கும் இப்போது தான் திருட்டுத்தனமாக கொடுக்க வேண்டியதை கொடுத்து அப்ரூவல் வாங்கியிருப்பார்கள். கட்டிட வேலைகள் உங்களை போன்ற புன்னகை மன்னர்கள் (இளித்தவாயர்கள்) கொடுக்கும் காசிலிருந்து பாதி நடந்துக் கொண்டிருக்கும் , தரமான கல்வியாளர்கள் என்று கூறியிருப்பதை நீங்கள் சென்றீர்களானால் உங்களை விட மோசமான ஏமாளி இந்த உலகத்தில் யாரும் இருக்க மாட்டீர்கள். உங்களுக்கு சென்ற பேட்ஜில் இன்ஜினியரிங் முடித்து தப்பி தவறி அக்கம் பக்கம் எட்டி பார்த்து தப்பி பிழைத்து பாஸ் செய்த விரிவுரையாளர்கள் (மீசை கூட இன்னும் முளைத்திருக்காது) நாங்கள் தான் பல வருடம் அனுபவம் மிக்கவர்கள் என்று மார்தட்டி உங்களிடமிருந்து கற்க சாரி, உங்களுக்கு விரிவுரையாற்ற காத்திருப்பார்கள். வேறு என்ன செய்ய தலையெழுத்தே என்று நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமாக உங்கள் கல்லூரி வாழ்க்கை துவங்கும்,
ஆனால் இதற்கு விதிவிலக்காக பிராண்டட் கல்லூரிகள் உள்ளன, இப்போது பொருட்களில் பார்த்தீர்களானால் கிளாக்ஸோ, பார்லே, நெஸ்லே போன்று உள்ளது அல்லவா, அதுபோல பிராண்டட் நாங்கள் டீம்டு யூனிவர்சிட்டி என்பார்கள், ஆனால் உள்ளே சென்றீர்களானால் உங்கள் காடு மேடு வீடு அனைத்தையும் விற்று தீர்க்க வேண்டும், நமது பெற்றோர்களும் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ளார்கள், அனைத்தையும் விற்றாவது எனது மகள் டீச்சர் டிரெய்னிங் ரூ. 2 லட்சம் கொடுத்து சேர்ததுள்ளேன் எனது வாய் கிழிய புன்னகையோடு பெருமை பீற்றி திரிகிறார்கள், எனது மகன் ரூ. 5 லட்சம் கொடுத்து இன்ஜினியரிங் சேர்த்து விட்டேன் என்று, அய்யா, நல்ல வேளை எங்கள் காலத்தில் தான் இந்த கல்வித் தந்தைகள், கல்வி வள்ளல்கள் வ்ளரவில்லை. நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். மேலும் எங்கள் காலத்து பெற்றோர்களும் இந்த அளவு பேராசையோடு இல்லை என்று தான் கூற வேண்டும், மெரிட் இருந்தால் படி, இல்லையேல் டிகிரி படி, ஏதாவது ஒரு வேலை பார் என்றோடு நிறுத்தி விட்டார்கள் என நினைக்கிறேன். ஆனால் தற்போது எங்கெங்கு காணினும் இந்த இன்ஜினியரிங் பித்து தலைக்கேறி விட்டது என நினைக்கிறேன். அதிலும் இந்த கம்ப்யூட்டர் வந்தாலும் வந்தது, எவன் எடுத்தாலும் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்கிறேன் என்கிறான், அய்யா வித்துவான்களே அனைவரும் படித்தாலும் திறமையுள்ள 10 அல்லது 15 சதவீதம் பேர் மட்டுமே கேம்பஸ் இன்ட்ரிவியூல் தெரிவாகிறான் என்பதை உணர மாட்டாமல் கைப்புள்ள ரேஞ்சிலேயே அலைகிறார்கள்.
முதலில் தனது மகனை சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனாக வளர உதவுங்கள், 5 இலக்க சம்பளம் மற்றும் இன்ஜினியரிங் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை உணருங்கள், மேலும் எந்தவொரு அரசாங்கமும் இந்த சுயநிதிகல்லூரிகளையும், தனியார் கலைக் கல்லூரிகளில் அடிக்கும் பகல் கொள்ளைகளை கண்டுக் கொள்வதே இல்லை. தப்பி தவறி மருத்துவர் .ராமதாசு ஏதாவது கூறினால் நமது உயர்கல்வித் துறை அமைச்சர் உடனே தடாலடியாக ஏதாவது பதில் அறிக்கை கொடுத்து அறிக்கை லாவணி நடத்திக் கொண்டிருக்கிறார். இங்கு நமது கல்வித் தந்தைகள், கல்வி வள்ளல்கள் மூட்டை மூட்டையாக பணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் தற்சமயம் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை பார்த்தால் எனக்கு மிகுந்த பாவமாக உள்ளது. 24 மணி நேரம் சாரி ஒரு 30 மணி நேரம் வைத்துக் ்கொள்ளலாம் எப்போது பார்த்தாலும் மக்கப் தான் சாரி நெட்ரு தான், சாரி அரைத்த மாவு தான், சாரி மனப்பாடம் தான் இதை மேற்பார்வையிட நமது ஆசிரிய பெருந்தகைகளும் கல்வித் தந்தைகளும் அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டு உள்ளார்கள்.
பாரதி பாடிய ஓளி படைத்த கண்ணினாய் வா வா
எல்லாம் இப்போது இல்லை ஒளி இழந்த கண்ணினாய் மற்றும் கூன் விழுந்த முதுகினாய் வாவா தான், ஒரு விளையாட்டு கிடையாது, ஒரு சிந்திக்கும் திறன் கிடையாது ஒரு கட்டுரை போட்டி கிடையாது, 24 மணி நேரமும் மனப்பாடம் மற்றும் மக்கப் தான்,
இதே மாணவர்கள் சுயமாக சிந்திக்கும் திறன் அற்று மணனம் செய்வதால் தான் பாவம் பொறியிய்ல் கல்லூரிகளில் சென்று திணறுகிறார்கள்.
அய்யோ பாவம் இன்றைய மாணவர்களின் நிலை,
அய்யோ பாவம் இன்றைய பெற்றோர்களின் பேராசை
அய்யோ பாவம் இன்றைய கல்வித் தந்தை / வள்ளல்களின் இழிநிலை மற்றும் பணம் பண்ணும் உத்தி
நல்ல வியாபாரம் போங்கள், கல்வி கடைச்சரக்கு ஆகி விட்டது.
மீண்டும் பாரதியை தான் நான் வம்புக்கு இழுக்கிறேன்
படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் மோசம் போவான் அய்யோ என்று போவான் என்றான் அந்த மகா கவி
இந்த சொற்றொடர் இந்த கல்வித் தந்தைகளுக்கும் பொருந்தும், வருங்காலம் என்றைக்கும் உங்களை மன்னிக்காது என்பதை நினைவில் வையுங்கள், உங்கள் பாவ மூட்டைகளிலிருந்து விடுபட சிறிதளவாது புண்ணியம் சேர குறைந்த பட்சம் தகுதியுடைய மாணவர்களிடமிருந்தாவது இந்த நன்கொடை / அன்பளிப்பு / கல்விக் கட்டணம் போன்றவற்றை வசூலிக்காது இருக்கவாது முயற்சி செய்து தான் பாருங்களேன், உங்கள் பிள்ளைக்குட்டிகள் எதிர்காலத்தில் நன்கு இருக்கும், அய்யா இதை கருத்திற் கொள்ளுங்கள், மாதா பிதா செய்த பாவம் மகற்கு என்ற மூதுரையை மனதிற் கொள்ளுங்கள் அய்யா
நட்புடன்-துர்வாசர்
No comments:
Post a Comment