சென்ற வாரம் அரசியல் உலகில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறேன்.
ராகுல்காந்தி என்னை யாரும் யுவராஜ் என்று குறிப்பிட வேண்டாம், என்று கூறினாராம். என்ன பெருந்தன்மை
கூப்பிடும் பிரகிருதிகளுக்கு முதலில் அறிவிருக்க வேண்டும், தற்போது மன்னராட்சி நடைபெறும் எண்ணத்திலேயே இருப்பார்கள் போலும்,
மேலும் தற்போது கடந்த 1 மாத காலமாக ராகுல் காந்தி ஏழை பங்காளர் என்று படாதபாடு பட்டு அரிதாரம் பூசி பார்க்கிறார். ஏழைகளின் வீட்டில் சப்பாத்தி சாப்பிடுகிறார். அவர்கள் வீட்டில் இரவு தங்குகிறார். அவர்கள் வீட்டு பூனைக்குட்டி, நாய்க்குட்டியை கொஞ்சுகிறார், காலைகடன் கழிக்கிறார், நிலவொளியில் படுக்கிறார். அய்யா இது எல்லாம் எம்.ஜி.ஆர். காலத்து டிரெண்ட் இனிமேலும் இது எடுபடாது என்பதை தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள். உடன்பிறப்பே திரண்டு வாருங்கள் என்றால் யாரும் திரண்டு வருவதில்லை. குவார்ட்டரும் பிரியாணி பொட்டலமும் அன்றைய தினக் கூலியான ரூ. 50/- கொடுத்தால் தான் உடன்பிறப்பே வருகிறார்கள். இந்த யுகத்தில் யாரை ஏமாற்ற ராகுல்காந்தி இவ்வாறு வேஷம் போடுகிறார் என்றே தெரியவில்லை, கவலையே வேண்டாம். நமது மக்கள் பரம் பரை பரம்பரையாக நேரு குடும்பத்தினரை யாரையும் கேட்காமலே பிரதமர் நாற்காலியில் அமர்த்தி விடுவார்கள். அதனால் ரொம்ப ஸ்டண்ட் அடிக்கத் தேவையில்லை,
நேரு குடும்பத்து நாய்குட்டியாக இருந்தால் கூட நாற்காலியில் அமர்த்தி விடுவார்கள். இந்தியர்கள் மிகுந்த நன்றி விசுவாசம் உள்ளவர்கள். அது மட்டும் இல்லாது எதிர்கட்சியான B.J.P.யை பற்றி கேட்கவே வேண்டாம். அவர்கள் அயோத்தி பிரச்சினையிலிருந்து ராமரிலிருந்தும் இன்னும் மீளாமலேஉள்ளார்கள்.
ஆகவே ராகுல் காந்தி ரொம்ப பிரம்ம பிரயத்தன ப்பட த்தேவையில்லை,
அப்புறம் நம்ம டி.ஆர்.பாலு மிகவும் பெருந்தன்மையாக நாடாளுமன்றத்தில் சபை கூச்சம் சிறிதும் இன்றி எனது குடும்பத்திற்கு பரிநதுரைக்க சொன்னேன் என்ன தவறு என்று சிறிதும் வெட்கமின்றி கேட்கிறார், என்ன அவையடக்கம்,
இதில் பிரதமர் அலுவலகத்திலிருந்து வேறு நாங்கள் பரிந்துரைக்கவில்லை, வந்த கடிதத்தினை அப்படியே Forward செய்தோம், பரிந்துரை செய்யவில்லை என்று சப்பைக்கட்டு வேறு என்ன ஒரு அருமையான பதில். பிரதமர் பாவம் இவ்வளவு கேவலமாக போக வேண்டாம். மேலும் டி.ஆர்.பாலு புத்திரருக்கு நேரடியாக முகவரி தெரியாதா? என்ன இவர் மூலமாக தான் செல்ல வேண்டுமா என்ன? டெலிவரி முகவரி தெரியாத தபால்களை சேர்க்கும் அஞ்சலக வேலையைத் தான் பிரதமர் அலுவலகம் செய்ய வேண்டுமா என்ன?
No comments:
Post a Comment