Monday, May 12, 2008

சன்டையும் சச்சரவும் எங்கள் பரம்பரை சொத்து

நான் தலைப்பில் குறிப்பிட்டிருப்பது திருவிளையாடல் படத்தில் சிவாஜி அரசரிடம் அரசவையில் நாகேஷ்-ற்காக பரிந்து பேசும் காட்சியில் புலவர்களுக்கு சன்டையும் சச்சரவும் எங்களது பரம்பரை சொத்து அதில் நீர் தலையிட வேண்டாம் என்று ஒரு வசனம் வரும், அதுபோல் இலக்கிய கர்த்தாக்களுக்கிடையில் சன்டை தேவை தான் அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கடந்த 15 நாட்களுக்காக ஜெயமோகன் - சாருநிவேதிதா இவர்களின் இணைய தளங்களை படித்துப் பார்த்தீர்களானால் இதைப் பற்றி உங்களுக்கு தெளிவாக புரியும்.
அதிலும் குறிப்பாக சாரு நிவேதாதாவின்
http://www.charuonline.com/may2008/pani.html
http://www.charuonline.com/may2008/pani2.html
என்ற இரண்டு கட்டுரைகளின் கேவலத்தின் உச்சகட்டம்.
என்ன கேவலமான எழுத்தாள ஜென்மம் என்பதே எனக்கு புரியவில்லை.
ஜெயமோகன் அவர்கள் தினமலர் பத்திரிக்கையில் சாருவினை கிசு கிசு எழுதுபவர் என்று அவரின் இணைய தளத்தில் கூறி விட்டதற்காக இந்த இரு கட்டுரைகளிலும் திட்டி தீர்த்திருக்கிறார். மீன் கடை கெட்டது போங்கள்.
தமிழில் அதுவும் எழுத்தாளர் என்று பெருமை பீற்றிக் கொள்ளும் சாருவிடமிருந்து இவ்வளவு கேவலமான நடையை எதிர்பார்க்கவில்லை
எழுத்து எனக்கு நெருப்பு மாதிரி அது ஒரு தவம் போல என்று இதில் வெட்டி பீத்த பெருமை வேறு
எந்த கேடு கெட்ட எழுத்தாளனாவது இவ்வளவு கேவலமான ஒரு சொற்றொடர்களை பயன்படுத்தியதுண்டா, கொஞ்சமாவது அறிவு வேண்டாம். தமிழ் வாசிக்கத் தெரிந்த சிலர் தெரிந்தோ தெரியாமலோ அல்லது அறிந்தோ அறியாமலோ சாருவை ஒரு எழுத்தாளர் என்றாவது ஒப்புக் கொள்கிறார்களே அதற்காவது நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டாமா?
வேறு ஒன்றும் காரணம் இல்லை.
தற்போது பாவலர் விழாவில் ஜெயமோகனுக்கு பரிசு கிடைத்த ஆற்றாமை என நினைக்கிறேன்
அது மட்டுமின்றி அவர் செய்து வந்த கிசு கிசு எழுத்து பணியினை அம்பலமாக்கியதன் விளைவு
பார்க்க http://jeyamohan.in/?p=417
கடந்த 10 நாட்களில் சாருவின் இணையதளத்தில் வந்த கட்டுரை
குரங்கு சாராயம் குடித்த கதை தான் போங்கள்
அய்யா எழுத்தாள பெருந்தகையே உங்களுடையதை நீங்களே திறந்துக் கொண்டால் உங்களுக்குத் தான் கேவலம், உங்களுடைய தெறம (நன்றி ஜெ.மோ) அவ்வளவு தான் என்று உலகம் அறிந்துக் கொள்ளும். மூடி வைத்துக் கொள்ளும் வரைக்கும் தான் உங்களுக்கு மவுசு
அய்யா சாருவே உங்கள் எழுத்துப் பணி மென்மேலும் வளர வேண்டும் என்றும் உங்களது எழுத்து தெறம தமிழ்நாடு மட்டுமின்றிஉலகம் முழுவதும் பரவ வேண்டும் என்பதே எங்கள் அவா ஆகவே சற்று தமிழ்மொழி வசவினை குறைத்துக் கொண்டு உங்கள் டிஸ்கஷனை எழுத்து பக்கம் திருப்பும் அய்யா
-துர்வாசர்


No comments:

Post a Comment