Tuesday, June 17, 2008

கனிமொழியின் கன்னிபேச்சு

ஆயிற்று வெற்றிகரமாக திமுக மகளிர் மாநாடு கடலூரில் நடத்தி முடித்தாயிற்று, வேறு என்ன வேண்டும் தமிழ்நாட்டிற்கு, மாதம் மும்மாரி மழை பொழிந்து விடும். நாட்டில் விலை வாசி குறைந்து விடும் சுபிட்சம் தலைதூக்கி விடும். இந்த மாநாடு என்னும் கூத்து தமிழ்நாட்டில் கண்டு பிடித்து கூத்தடிக்க தொடங்கியதே இந்த திராவிடக் கட்சிகள் தான், ஊரில் உள்ள அனைத்து தாய்மார்களையும் திரட்டி அவர்களை கொளுத்தும் வெயில் பேரணி என்று நடக்கவிட்டு விட்டு தலைவர்கள் மற்றும் அவர்களின் சுற்றத்தார்கள் குடும்பத்தினர்கள் (அனைத்து குடும்பங்களும்) ஏசி மேடையில் அமர்ந்து பந்தாவாக கையசைத்து வெற்றிகரமாக தீர்மானங்களை நிறைவேற்றி மாநாடு நிறைவேற்றியாகி விட்டது. மாநாட்டின் ஹைலைட் கனிமொழியின் மாநாட்டு பேரூரை.
40நிமிடம் பேசினாம், பேச்சின் முக்கிய அம்சம் தமிழ்நாடு குஜராத் ஆகி விடக் கூடாதாம் என்ன அக்கறை, கண்டிப்பாக நீங்கள் ஆட்சியில் இருக்கும் வரை தமிழ்நாடு குஜராத் என்ன பீகார் ஆக கூட மாற முடியாத நிலையில் இருக்கும். அனைத்தும் இலவசம் என்று வாக்குறுதிகளை அள்ளி தெளித்து விட்டு தமிழகத்தை முழுவதும் குட்டிச் சுவராக்கிக் கொண்டு தினமும் ஒரு அக்கப்போர் சாரி அறிக்கை பாமகவுடன் விட்டுக் கொண்டு மேலும் சிறிது நேரம் மீதி இருந்தால் கதை வசனம் எழுதிக் கொண்டு அல்லது ஏதாகிலும் ஒரு திரைக்கதைக்கு வசனம் எழுதிக் கொண்டு விட்டு அல்லது சினிமா நிகழ்ச்சியில் ஏதாகிலும் பங்கெடுக்கும் தலையாய பணியினை தவிர நமது முதலமைச்சர் எந்த நல்ல செயலை செய்கிறார். சொல்லுங்கள் பார்ப்போம்,
அது மட்டுமில்லாது பாபர் மசூதி இடிப்பின் போது திமுக -பாஜக கூட்டணி தான் இருந்தது. மேலும் கோத்ரா சம்பவத்தின் போதும் திமுக-பாஜக கூட்டணி தான் இருந்தது. அப்போது மோடி தெரியவில்லை, குஜராத் தெரியவில்லை. பதவி சுகம் வேண்டும் வரை அனுபவித்துக் கொள்ள வேண்டியது. வேண்டாம் என்றால் எங்கிருந்தாவது இந்த மதசார்பின்மை என்னும் மாயபிசாசு ஆட்டி படைத்து விடும். குஜராத் மாநிலம் கண்டுள்ள வளர்ச்சியினை பாருங்கள் மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த வாக்கெடுப்பில் குஜராத்தின் மிகச்சிறந்த மனிதராக மோடியை தேர்ந்து எடுத்து உள்ளார்கள் அம்மாநில மக்கள். அதையெல்லாம் பார்க்க கூட உங்களுக்கு நேரமிருக்காது. நமக்கு எங்கே நமீதாவின் குத்தாட்டத்தை பார்க்கவும், கலைஞர் தொலைக்காட்சியின் மானாட மயிலாட நிகழ்ச்சியை பார்க்கவே நேரம் சரியாகஇருக்கும்
என்ன செய்வது நமது தலையெழுத்து, இந்த உளறல்களையெல்லாம் நாம் சகித்துக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த லட்சண்த்தில் கனிமொழியா - கயல்விழியா என்ற போட்டி வேறாம், இதில் ஸ்டாலினுக்கு வருத்தமாம் லண்டன் சென்று விட்டாராம். நல்ல கூத்து போங்கள்
நிற்க - என்றோ துக்ளக்கில் படித்தது நமது நினைவிற்கு தற்போது வந்து போகிறது.
திமுக என்னுடைய குடும்பம் போல என்று தலைவர் கூறியுள்ளதற்கு அர்த்தம்
ஆம். திமுக குடும்பச் சொத்து மட்டுமே என்றுபொருள் கொள்க
என்ற வரி தான் நினைவிற்கு வருகிறது
வாழ்க ஜனநாயகம், வாழ்க தந்தை பாசம், எனக்கு ஒரு ஏக்கம். இதுபோல நமது இளைய தலைமுறைக்கும் ஒரு தந்தையார் வாய்த்தால் போது மகன்/மகள் பாடு ஜாலிதான் போங்கள்


No comments:

Post a Comment