சென்ற வாரம் பள்ளியில் நடந்த ஏதோ ஒரு பரிசளிப்பு விழாவின் போது நமது மாண்புமிகு நிதியமைச்சர் திரு ப.சிதம்பரம் திருவாய் அருளிய வார்த்தைகள் என்ன தெரியுமா?
பாரதியின் வரிகளை மேற்கொள் காட்டியிருக்கிறார்.
பாதகம் செய்வோரை கண்டால் காறி உமிழ்ந்து விடுபாப்பா, எதிர் கொள் பாப்பா என நமது சிவகங்கை சின்னபையன் ( நன்றி மு.க.) உரையாற்றி உள்ளார் ,
நல்ல வேளை அந்த விழாவில் உள்ள குழந்தைகள் மேடைக்கு உடனடியாக வாயில் எச்சிலோடு சென்று விடவில்லை. சிறிதும் வெட்கம் கெட்ட தனமாக பாரதியின் வரிகளை எவ்வாறு உபயோகப்படுத்துகிறார் என்றே தெரியவில்லை,
பெட்ரோல் டீசல் விலை தாறுமாக உள்ளது, அதுவும்சரி வர விநியோகம் இல்லை பெரு நகரங்களில் கிடைப்பதில்லை, சமையல் எரிவாயு கிடைப்பதில்லை, அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் தாறுமாறாக உயர்ந்துள்ளன. பண வீக்கம் எகிறுகிறது,
நமது காம்ரேட்டுகள் கலைக்கிறேன், கலைத்து விடுவேன் கலைக்கப்போகிறேன் என உதார்காட்டியே பெட்டி பெட்டியாக வாங்கிக் கொள்கிறார்கள். நமது தாய் திருநாட்டினை பற்றி யாருக்கும் கவலை கிடையாது. இந்த லட்சணத்தில் திட்டகமிஷன் தலைவர் மாண்டேக் அனுவாவியா என்ன இழவு பெயரோ அவருக்கு லண்டன் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் தரப்போகிறதாம், அந்த நபர் உளறும் உளறல் என்ன தெரியுமா? எங்களிடம் பணம் வீக்கம் குறைய எங்களிடம் மந்திரம் ஒன்றும் கிடையாது, இன்னும் இரண்டொரு மாதங்களில் குறைந்து விடும் நம்புங்கள் என்கிறார், நம்புவோமாக, மோடி மஸ்தான் வேலை காட்டிக் கொண்டு இருக்கிறார்கள், இந்த இரண்டு பிரகஸ்பதிகளும்,
இதில் என்ன வேடிக்கை என்னவென்றால், இதை பற்றி யாருக்கும் அக்கறையில்லை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அடுத்த தேர்தல் மட்டுமே குறிக்கோளாக உள்ளார்கள். நாமும் பாரத நாடு பழம்பெரும்நாடு நீரதன் புதல்வர் இந்நிலை அகற்றாதீர் என்று் பாடி பீற்றிக் கொண்டு நமது ஆயுட்காலத்தை கழிப்போம்.
No comments:
Post a Comment