சென்ற வாரம் ஒரு இன்ஜினியரிங் கல்வி முடித்த 81 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ள ஒரு பெண்மணி என்னிடம் வந்து தனது பயோடோட்டா ரெடி செய்து தருமாறு என்னிடம் கோரினார். நான் ஒருமுறை துணுக்குற்று போனேன். இன்ஜினியரிங் முடித்துள்ள ஒரு பெண் ஆங்கிலத்தில2 பக்கம் தனது பயோடேட்டாவினை கூட எழுத முடியவில்லை என்றால் அவர் கல்வி பயின்றதின் தரம் எவ்வாறு இருக்கும் ? அவர்களுக்கு போதித்த விரிவுரையாளர்களின் தரம் எவ்வாறு இருக்கும், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கூட கல்வியின் தரம் நன்றாக இருந்தது. இப்போது டிகிரி முடித்தவர்கள் தமிழில் கூட ஒரு அடிப்படையான மேட்டருக்காக ஒரு விண்ணப்பம் எழுத கூட தெரியாத நிலையில் உள்ளார்கள். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை நிரூபிக்கிறார்கள். கடந்த ௨0 வருடங்களாக ஆசிரியர்களின் பொருளாதாரநிலை உயர்ந்துள்ளது. சம்பளக் கமிஷன், சம்பள உயர்வு மற்றும் அவர்கள் செய்யும் தனிப்பட்ட முறையிலான வியாபாரம் போன்றவைகளால் ஆனால் அவர்களிடம் பயிலும் மாணவர்களின் நிலை பெரிய கேள்விக்குறி தான், தொடக்கக் கல்வியிலிருந்தே இந்நிலை தான், மாணவர்களுக்கு அடிப்படையான அறிவை கூட புகட்ட தயங்குகிறார்கள். மாணவக் கண்மணிகளும் நமது அறிவுப்பூர்வமான கழக அரசால் பிறப்பித்துள்ள ஆணையின்படி ஆல்பாஸ் ஆகிவிட்டு 10ம் வகுப்பு வரை ஒன்றும் தெரியாமலே வந்து விடுகிறார்கள்
இது என்ன கல்வி முறை என்றே புரியவில்லை, நாம் எங்கே செல்கிறோம் என்றே புரியவில்லை
கல்விக் கூடங்களிலும், கல்லூரிகளிலும், கடுமையான சட்டத் திட்டங்கள் கொண்டு வரவில்லையென்றால் நிச்சயம் நமது சந்ததியினர்கள் வருங்காலத்தில் எந்த ஒரு போட்டித் தேர்விலும் வெற்றி பெற இயலாது, குறிப்பாக கிராமப்புற மாணவர்கள்
நகர்ப்புற அரசாங்க பள்ளிகள் நிலை பரவாயில்லை. தனியார் பள்ளிகளுக்கு ஈடு கொடுக்கின்றன. ஆனால் கிராமப்புற பள்ளி மாணவர்களின் நிலை அந்தோ பரிதாபம் தான்
எங்கள் ஏரியா ஆசிரியர்கள்செய்யும் ஆசிரியப் பணி குறித்த எனது வேதனை வெளிப்பாடுகள்.
கண்டிப்பாக அனைத்து ஆசிரியர்களும் அவர்களின் ஆசிரியர் பணியினை செக்ண்டரியாக வைத்துள்ளார்கள். பிரதான தொழிலாக அவர்களுக்கு வரும்படி வரும் வகையில் அவரவர் நிலைக்கு ஏற்ப சைடு பிஸினஸ் அமைத்துள்ளார்கள்.
அவர்களுக்கு பள்ளி என்பது காலை ௰ மணி முதல் மாலை நான்கு மணி வரை ஓய்வெடுக்கும் அறை ஆகும். அங்கு வந்து வெட்டி அரட்டை அடித்துக் கொண்டு அல்லது தனது பிஸினஸை எவ்வாறு விரிவுபடுத்துவது என்பதிலேயே பொழுது போக்குகிறார்கள். மாறுதல் என்பது அவர்களுக்கு சுத்தமாக கிடையாது. அவ்வாறு மாறுதல் ஏற்பட்டாலும் ஒன்றியத்திற்குள்ளேயே மாறுதல் வாங்கிக் கொள்கிறார்கள். நில புலன்கள் வீடு வாசல்கள் , மனைவி மக்கள் என்று பக்காவாக செட்டில் ஆகுவதில் மட்டும் தான் குறியாக உள்ளார்கள். நீங்கள் வேண்டுமானாலும் சோதனை செய்துக் கொள்ளுங்கள் 5ம் வகுப்பு முடித்து வெளியே வரும் மாணவ மாணவிகளினைசோதனை செய்து பாருங்கள் எத்தனை பேருக்கு தமிழ் தவறின்றி எழுத வருகிறது என்று, இவ்ர்கள் எவ்வாறு உயர்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படிக்க இயலும்? நான் இதை சவாலாக கூறுகிறேன். ஒரு பத்து குழந்தைகளில் ஒன்று கூட தமிழில் தவறு இல்லாமல் எழுதாது.
அந்த லட்சணம் இவர்கள் மேற்கொள்ளும் ஆசிரியப் பணி.
இந்த 6வது சம்பளக் கமிஷன் என்னவாயிற்று, அரியர் என்னவாயிற்று, ஊதிய உயர்வு என்னவாயிறு என்று பினாத்தல்கள் வேறு
இவர்களுக்கு ஏற்கனவே கொடுக்கும் சம்பளமே அப்பர தண்டம்,
இதில் வேறு ஊதிய உயர்வாம்,
கந்து வட்டி விடுகிறார்கள், ஏலச்சீட்டு நடத்துகிறார்கள். பிஸினஸ் செய்கிறார்கள், நிலம் நீச்சு கவனிக்கிறார்கள், அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்களிடம் மட்டும் வட்டிக்கு விடுகிறார்கள். ரியல் எஸ்டேட் செய்கிறார்கள், ஷேர் வாங்குகிறார்கள்,
இதற்கு ஒரே தீர்வ மூன்று வருடத்திற்கு ஒரு முறை நிச்சயம் பொது மாறுதல் அதுவும் மாவட்டத்திற்குள் ஆனால் ஒன்றியத்தை விட்டு அடுத்த ஒன்றியம் என இருத்தல்அவசியம். கணவன் மனைவி இருவரும் ஒரே இடத்தில் ( ஒரே பள்ளியில் நிச்சயம் பணிபுரியக் கூடாது,
பிரதி வருடம் தேர்வு முடிவுகள் குறைந்தால் தேர்ச்சி சதவீதம் குறைந்தால் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் இன்கிரிமெண்ட் குறைப்பு என்று தனியார் கம்பெனிகளில் உள்ளது போல் சட்டத்தை கடுமையாக்கவில்லை என்றால் நமது குழந்தைகளின் எதிர்காலம் அதோகதி
தான்
ஆனால் இதை பற்றியெல்லாம் எந்த நாயும் கவலைப்படுவது கிடையாது,
பெற்றோர்களும் சரி , ஆசிரியர்களும் சரி, உயர் அதிகாரிகளும் சரி, ஆட்சியாளர்களும் சரி,
காலை எழுந்தால் மாலை ஆகிறது
மறுநாள் விடிகிறது
பொழுது போகிறது
இங்கே பாரதியின் கூற்று தான் எனக்கு மீண்டும் நினைவுக்கு வருகிறது
படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் சாவான் அய்யோ என்று போவான் என்றான் அந்த மகாகவி
ஆனால் இந்த படித்த ஆசிரியர்கள் மென்மேலும் தங்கள் செல்வ வளத்தை பெருக்கி வருகிறார்கள், வாழ்க அவர்களது கல்வி சேவை
தாங்கொணாத கோபத்துடன்
துர்வாசர்
No comments:
Post a Comment