மேற்சொன்ன வரிகளை இன்று நினைத்தால் நிச்சயமாக கண்ணீர் பெருகுகிறது. இன்று (25.07.2008) அன்று பெங்களுர் பகுதியில் 7 இடங்களில் அடுத்தடுத்து 12 நிமிடங்களுக்குள் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது . ஆயிற்று வடமாநிலங்களில் நடந்து வந்த குண்டுவெடிப்பு மெல்ல புரையோடி தொற்று நோய் போல தென்மாநிலங்களுக்கும் பரவி விட்டது. இனி கரடிப்பட்டி தம்மம்பட்டி போன்ற பகுதிகளில் வெடிக்காதது தான் பாக்கி
அய்யா இது குறித்து எந்த அரசியல் வியாதிகளுக்கும் பிரக்ஞை இல்லையா என்ன? மனிதனுக்கு தேவையான அடிப்படை வசதிகளான உண்ண உணவு, உடுக்க உடை இருக்க இருப்பிடம் ஆகியவற்றிற்காக அல்லாடிக் கொண்டிருக்கும் அப்பாவி மனிதர்கள் தற்போது உயிருக்கும் சேர்த்து அல்லவா போராட வேண்டிய நிலையில் உள்ளான். அய்யா தயவு செய்து குண்டு வெடிப்பு சம்மந்தமாக தீவிர நடவடிக்கை எடுங்கள், சோம்பியிராதீர்கள். தீவிரவாதத்தை வேரொடு மண்ணாக பிடுங்கி எறியுங்கள், ஏன் இந்த சுணக்கம் உங்கள் உயிருக்கு மட்டும் உத்திரவாதம் கருப்பு பூனை சிவப்பு பூனை என்று ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்ளே அப்பாவி பொது மக்கள் என்ன பாவம் செய்தார்கள் இந்த இந்தியாவில் பிறந்ததை தவிர
இதில் அச்சுறுத்ததான் குண்டு வெடிப்பு டைம்பாம் தான், ஆர்டிஎக்ஸ் இல்லை உயிர் சேதம் இல்லை என்று இந்த மீடியாக்கள் பினாத்தல்கள் தாங்க இயலவில்லை. மீடியாவிற்கு எல்லாம் குண்டு வெடிப்பு என்றால் குறைந்தது 40 அல்லது 50 உயிர்களாவது பலியானால் தான் திருப்தியாக இருக்கும் போலிருக்கிறது . அய்யா உயிரின் மதிப்பு அவ்வளவு தானா? இந்தியாவை யாராகிலும் காப்பாற்ற இயலும் என எனக்கு தோன்றவில்லை. பாண்டிச்சேரி ஆசிரமத்து அன்னை கூறுவார்கள். ஒரு அதிமனிதன் superman விரைவில் தோன்றிபிரபஞ்சத்தை காப்பான் என்று, அவன் எப்போது தோன்றி நம்மையெல்லாம் ரட்சிக்கப்போகிறானா தெரியவில்லை. நமது மக்களும் இலவச மாயை விட்டு வெளியே வராமல் பரதேசி பன்னாடைகளையெல்லாம் தலைவராக தேர்ந்து எடுத்து விட்டு அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் விடிவு காலம் தான் என்ன? ஒன்று போலி மதசார்பின்மை பேசி தீவிரவாதத்தை வளர்க்காதீர்கள். இல்லையென்றால் நீங்கள் இந்தியாவில் இந்துக்கள் அனைவரும் வெளியேறி விடுங்கள் முஸ்லீம்கள் மட்டும் இந்தியாவில் இருந்து விட்டு போகட்டும் என்று பிரகடனப்படுத்தி விடுங்கள். அப்போதாவது குண்டு வெடிப்பு நடக்காமல் இருக்கட்டும்.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல இன்னும் 1 வார காலத்திற்கு அனைத்து ஆலயங்களும் ., ஐடி செண்டர்களும், விமான நிலையங்களும் , முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படும், சோதனையிடுவார்கள். பிறகு நாடு எக்கேடு கெட்டு போனால் என்ன என்று காவல்துறையினர் அவர்கள் வருமானத்தை பெருக்க போய்விடுவார்கள். நமது மீடியாக்களும் அடுத்து குண்டு வெடிப்பு ஏற்படாதா என்ன என்று காரத்திகை மாதத்து தெரு நாய் போல நாக்கை தொங்க போட்டுக் கொண்டு மைக்கும் கையுமாக அலைவார்கள். கட்டுரையின் தலைப்பினை தயவு செய்து ஆளும் வர்க்கம் இன்னொருமுறை நினைவு கூறவும்
-துர்வாசர்
No comments:
Post a Comment