Friday, July 18, 2008

யாருக்கும் வெட்கமில்லை பகுதி-8

நமது பாரத மணித்திருநாடு வறுமையான நாடு என்று யாராலும் சொன்னால் அவர்களை பளார் என்று ஒரு அறை விடுங்கள் இன்றைய நிலவரப்படி ஒருஎம்பியின் விலை30 கோடிக்கு போகிறது, யார் சொன்னார் ஏழை நாடு என்று, கேவலத்தின் உச்சக்கட்டம் எம்பிக்கள் பேரம் பேசப்படுவது, எம்பிக்கள் சோரம் போவது , இதில் நடந்த உச்ச கட்ட பேரம் நமது அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்திராத அவலம் அம்பானி சகோதரர்களுக்கு இடையே உள்ள பூசலினை பயன்படுத்தி இளைய அம்பானிக்கு வரிவிதிப்பு ஏற்படுத்துக்கள் அப்போது தான் நான் ஆதரிப்பேன் என அமர்சிங் மிரட்டுவதும், சிதம்பரம் மறுப்பதும், மறுநாள் இரு சகோதரர்களையும் நம்ம பெரிய நாட்டாமை மன்மோகன் சிங் சமாதானம் செய்து வைப்பதும் என்ன கொடுமை சார் இது, ஏற்கனவே நமது சிதம்பரம் அண்ணன் தம்பி பாகப்பரிவினை வேறு செய்து வைத்தார்,
கேவலத்தின் உச்சகட்டம் அல்லவா, இது , மக்களை இவ்வளவு மடையர்களாகவும், முட்டாள்களாகவும் நினைக்கும் இவர்கள் இப்படி பதவியில் நீடிக்க வேண்டுமா என்ன? அது மட்டுமின்றி இந்த பிரகஸ்பதிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அடித்துள்ள கூத்தினை நினைத்தால் உள்ளம் கொதிக்கிறது, பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு பெங்களுர், சென்னை போன்ற பெரு நகரங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டது அல்லவா, அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இந்த பிரகஸ்பதிகள் விலை யேற்றம் அறிவித்திருந்தார்கள். விலையேற்றத்தினை மக்கள் மறப்பதற்காக செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தி உள்ளார்கள் இந்த எண்ணெய் நிறுவனங்கள், மத்திய அரசின் வாய்மொழி ஆணை காரணமாக இந்த நிலை நீடித்ததாம், என்ன கொடுமை, சிறிய கோட்டை அழிக்க பெரிய கோடு இழுத்தால் சிறிய கோடு தெரியாது என்ற எண்ணம் எவ்வளவு கேவலத்துக்குரியது, கப்பலில் வந்துக் கொண்டுள்ளது நாளை வந்து விடும் வந்தவுடன் தட்டுப்பாடு தீர்ந்து விடும் என்று அனைத்து டிவி செய்திகளில் கூறினார்கள். ஆனால் கப்பலில் வந்தது டீசல் , பெட்ரோல் கிடையாது. மேலும் மதியம் 2 மணிக்கு எல்லாம் தட்டுப்பாடு தீர்ந்து விட்டது. கப்பலில் வந்த டீசல் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு லாரியில் சேர்வதற்கே 1 நாள் ஆகும். இந்த விஷயம் கட்டை வண்டி இழுக்கும் கந்தசாமிக்கு கூட தெரியுமே, எப்படி 2 மணிக்கு தட்டுப்பாடு தீர்ந்தது, யாரை ஏமாற்றுகிறார்கள், தட்டுப்பாடு உள்ள நாட்களில் அனைத்து எண்ணெய்நிறுவனங்களும் தங்களிடம் எவ்வளவு இருப்பு இருந்தது என்று உண்மையாகிலும் ஒரு வெள்ளை அறிக்கை தர இயலுமா, என்ன அக்கிரமம்? நமது தாய் திருநாட்டை இனி யார் தான் காப்பாற்றுவார்கள் , பாம்பின் விஷத்தை விட கொடிய விஷமாக விலைவாசி ஏறிக் கொண்டு செல்கிறது,
அதை பற்றிய சொரணை யாருக்கும் கிடையாது,
அனைவரின் கவனமும் 22ம் தேதி ஆட்சி தங்குமா, புட்டுக்குமா என்பது பற்றியது தான், பணவீக்கம் 13 சதவீதம் ஆனால் என்ன, அல்லது அரை சதம் அடித்தால் கூட என்ன, நமது நாடு கூடிய விரைவில் ஜிம்பாவே ரேன்்சுக்கு மாறினாலும் மாறிவிடும் என நினைக்கிறேன். நாமும் வழக்கம் போல கலிகாலம் விலைவாசி எகிறுகிறது என்ன செய்ய என்று வாய் பேசி மௌனித்து விடுவோம்,
அங்கலாயப்புடன்
மற்றும் கடந்த 1 வாரமாக சொல்ாணொத பவர் கட் தொல்லையினை அனுபவிக்கும் வேதனையுடன்
துர்வாசர்


No comments:

Post a Comment