Thursday, July 24, 2008

யாருக்கும் வெட்கமில்லை பகுதி-9

ஒரு வழியாக 22ம் தேதி வெற்றிகரமாக நமது மனமோகனசிங்கம் பெரும்பான்மையை நிரூபித்து விட்டார். ஆனால் திரை மறைவில் நடந்து முடிந்த குதிரைபேரங்கள் அசிங்கங்கள், அம்பலங்கள், விருந்துகள் , அவை அனைத்தும் வெட்கக் கேடானவை. பாரதத்தின் பெருமையை சர்வதேச அளவில் சீர் குலைப்பவை. ஆனால் இதற்கு முன்னோடி மறைந்த மௌன சாமியார் நரசிம்மராவையே சாரும். அவர் போட்டுக் கொடுத்த பாதையில் நமது மனமோகனசிங்கம் பயனித்து விட்டார். சீ. இது என்ன வெட்கம் கெட்ட பிழைப்பு இப்படி ஒரு பிழைப்பு தேவையா, காறி உமிழலாம் போல் உள்ளது
இதில் பாஜக நடத்திய கூத்து அதை விட கேவலம். வீடியோ ஆதாரம் உள்ளது என லஞ்ச பணத்தை நாடாளுமன்றத்தில் காட்டிய காட்சிகள் என்ன, கோலங்கள் என்ன, என்ன, என் ன
இதில் நமது ரயில்வே அமைச்சர் சரியான விதூஷகன் கெட்டான் போங்கள்
அவர் அடித்த கூத்து என்ன இதில்அந்த பிரகஸ்பதி எதற்கு எடுத்தாலும் மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் வம்புக்கு இழுக்கிறார்.
சபையின் இறுக்கத்தைகுறைத்தாராம்.
அனைத்து எம்பிக்களையும் அரபிக்கடலில் மூழ்கி சாகடிக்க வேண்டும்
இன்னும் 10 மாதம் கழித்து மக்கள் அடிப்பார்கள் பாருங்கள் பெரிய ஆப்பு அப்போது தான் தெரியும்
வல்லான் வகுத்ததே வாய்க்கால், இனியும் யாராகிலும் காந்தியை பாருங்கள் அவரை பாருங்கள் இவரை பாருங்கள் என உங்களிடம் கூறினால் பாராளுமன்றத்தை பாருங்கள் காந்தி படம் போட்ட நோட்டை பாருங்கள் என்று கூறுங்கள், பாரத நாடு பழம்பெரும் நாடு, நீரதன் புதல்வர் இந்நிலை அகற்றாதீர் உறி உறி


No comments:

Post a Comment