Wednesday, August 20, 2008

ஆயிற்று அரசு ஊழியர்கள் முகத்தில் சொல்லொணாத மகிழ்ச்சி ஆறாவது சம்பள கமிஷன் ஊதிய உயர்வு சுதந்திர தினத்தன்று நமது மாண்புமிகு பாரத பிரதமர் மனமோகனசிங்கம் அறிவித்து விட்டார். நாடு முழுக்க ஒரே திருவிழாக்கோலம் போங்கள் எங்கு காணினும் அரசு ஊழியர்கள் மத்தியில் இதே பேச்சு எனக்கு எவ்வளவு சம்பள உயர்வு, உனக்கு எவ்வளவு என்று ஒரே மகிழ்ச்சி அலை தான் போங்கள், வெட்கம் யாருக்கும் இல்லை ஆள்பவனிலிருந்து ஆண்டி வரை108 கோடி மக்கள் தொகையில் அரசு ஊழியர்கள் சதவிகிதம் 10 சதவிகிதம் மட்டுமே 10 சதவிகிதத்தை திருப்திபடுத்த மீதம் 90 சதவிகிதம் அவதிப்பட வேண்டும் என்ன பரந்த மனப்பான்மைஇதில் வேறு அரசு ஊழியர்களின் பிலாக்கனை என்னவென்றால் தனியார் துறையினரை விட எங்களுக்கு சம்பள ம் மற்றும் ஊதிய உயர்வு குறைவு என்று , அதிலும் அவர்களுக்கு கிடைத்தது இந்த ஐடி துறை அவர்கள் 40000 வாங்குகிறார்கள் 50000 வாங்குகிறார்கள் என்று வெட்கமாயில்லை இந்த வசனத்தை கூற, அவர்கள் எங்கே நீங்கள் எங்கே அவர்களின் பணிசுமை எங்கே உங்களின் சோம்பல் சுமை எங்கேதனியார் வசம் திறமையில்லை என்றால் அடுத்தநாளே வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். இங்கு திண்ணை தூங்கிகள் , வெட்டிப்பேச்சு பேசுபவர்கள், கையெழுத்து கூட சரியாக இடாத கைநாட்டுகள் எல்லாம் அரசு ஊழியர்கள் என்ற போர்வையில் தண்டச் சம்பளம் வாங்கிக் உலாவுகின்றன ஆந்தைகளை போல , இந்த லட்சணத்தில் சம்பளம் போதவில்லை தனியாருக்கு கொடுப்பது போல் இல்லை என்ற பினாத்தல்கள் வேறுஇதில் வேறு கொடுப்பது போல் கொடுத்து விட்டு வரி என்ற போர்வையில் சம்பளத்தைபிடுங்கிக் கொள்வார்கள் என்ற வியாக்கியானம் வேறுஒவ்வொரு அரசு ஊழியரும் அவர் எல்லையில் ஒரு குறுநில மன்னரை போல் நடந்துக் கொள்கிறார்கள். அரசாங்கமும் குறுநிலமன்னர்களுக்கு கப்பம் கட்டுகிறது போலும்பொதுத் தேர்தல் இன்னும் 10 மாதத்தில் வைத்துக் கொண்டு மறைமுகமாக லஞ்சம் கொடுப்பது போல் இவ்வாறு ஊதிய உயர்வை அறிவித்திருப்பது என்ன கொடுமை சார், என்ன ஊதிய உயர்வு அறிவித்தாலும் இந்த தடவை காங்கிரஸ் நிச்சயம் மத்தியில் தேறாது அது பூட்ட கேஸ் தான்இருப்பினும் விவசாயிகளுக்கு கார்டு அனுப்புகிறார்களாம்நாங்கள் எவ்வளவு சாதனை செய்திருக்கிறோம் என்றுஅதைவிட கொடுமை அவர்கள் சிலாகிக்கும் அதுவும் குறிப்பாக அவர்களது யுவராஜா ராகுல் காந்தி சிலாகிக்கும் கனவுத் திட்டமான அனைவரும் வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் வருடத்தில் 100 நாட்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு மீதி நாட்களில் வயிற்றில் ஈரத்துணி கட்டிக் கொள்ள வேண்டியது தான். இதில் வேலை சரியாக செய்யவில்லை என்று ரூ. 60/-கொடுத்தார்கள் என்று திண்டிவனத்தில் துப்பாக்கிச்சூடு, கண்டன பேரணி என்று இதனால் எல்லாம் இவர்கள் ஜெயித்து விட முடியும் எண்ணுகிறார்கள் போலும். வடிவேலு பாணியில் கூறுவது என்றால் உட்கார்ந்து யோசிக்கிறாங்க என்று நினைக்கிறேன் இந்த அரசாங்கத்தை நினைத்தால் நிச்சயம் வேதனை கலந்த சிரிப்பு மேலிடுகிறது அய்யா பாவம் நமது இந்தியாகடந்த2நாட்களாக எங்களது பகுதி ஆசிரியர்கள் 6-வதுசம்பள கமிஷன் ஊதிய உயர்வு சம்மந்தமாக அடிக்கும் கூத்தை கண்டு வெட்கத்துடன்துர்வாசர்


No comments:

Post a Comment