Monday, September 15, 2008

அண்ணாவின் நூற்றாண்டு கொண்டாடங்கள் கூத்து

நமது மு.க. அவர்கள் அறிஞர் அண்ணா நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாடு கிறேன் பேர்வழி என்று இன்று (15.09.2008) அன்று விடுமுறை விட்டு விட்டார். ஏற்கனவே அரசு அலுவலகங்கள் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் லீவு போக இன்று 3வது நாளாக திங்களும் விடுமுறை மேலும் மத்திய அரசாங்கம் நமது ஆட்சி என்பதால் என்ன மிரட்டினார்களோ தெரியவில்லை வங்கிகளுக்கும் விடுமுறை.
ஆனால் இங்கு எங்கள் ஊரான தம்மம்பட்டியில் நடத்த கூத்து அண்ணாவின் ஆவி ஆட்டி வைத்து விட்டது என நினைக்கிறேன். காலையில் திமுகவிற்குள் ஒரு சாரார் இன்னொரு சாராரை விட்டு விட்டு அவர்கள் மட்டும் அண்ணா வின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் கொடியேற்றிவிட்டு சாக்லேட் வழங்கிச் சென்று விட்டனர். அடுத்த பிரிவினர் வந்து நாங்கள் வருவதற்குள் எவ்வாறு கொடியேற்றலாம் என ஒரே ரகளை ஒருவ்ருக்கொருவர் அடித்துக் கொள்ள மன்டை உடைந்தது தான் மிச்சம் போலீசார் வ்ந்து குவிந்து ஒருவழியாக பிரச்சினையை சமாதானம் செய்தனர்கள். அண்ணாதுரை பாவம் நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பார் மேல் உலகத்திலிருந்து இந்த கூத்தை பார்த்து படுபாவிகளா நான் நூற்றாண்டு கொண்டாடச் சொன்னேனா, இவ்வாறு மன்டையை உடைத்துக் கொள்ளச் சொன்னேனா என்று
என்ன செய்ய அண்ணாவின் ஆவி ஆட்டுவிககிறது. கழக கண்மணிகள் அடிக்கும் கூத்தை நினைத்தால் நிச்சயம் வடிவேலு காமடியினை விட அதிக பட்ச சிரிப்பு வருகிறது. வாழ்க அண்ணாயிசம், வளர்க அவரது புகழ்,


No comments:

Post a Comment