நேற்று எங்கள் கிராமத்தில் (கவனிக்கவும் கிராமத்தில்) நடந்த மூன்று சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
சம்பவம்-1.
நேற்று காலை ஒரு தலைமை காவலர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது 4ம் வகுப்பு படிக்கும்சிறுவன் ஒருவன் அவரை பார்த்து குட்மார்னிங் என்று கூறியுள்ளான். அவரும் பதிலுக்கு குட்மார்னிங் தம்பி என்று கூறியுள்ளார். அவன் அவரை பரிகசிக்கும் எண்ணத்தில் 4,5 முறை குட்மார்னிங் என்று கூறி கிண்டலடித்துள்ளான். அவரும் பொருமையாக ஒரு முறை மட்டுமே குட்மார்னிங் என்று கூற வேண்டும் என்று கூறியுள்ளார். பின்னிட்டு அவனிடம் உன் மூக்கில் சளி ஒழுகுகிறது அதை துடைத்து விட்டுக் கொள் அப்பா என்று ஒரு தந்தைக்குரிய ஸ்தானத்தில் அறிவுரை கூறியுள்ளார். அதற்குஅச்சிறுவன் உனக்கு என்ன வேலை நீ என்னுடைய சளியை துடைத்து விடு அதையாவது உருப்படியாக செய் என்று அவரை ஏளனம் செய்து ஓடி விட்டான். பெரும் கோபம் அடைந்த நமது தலைமைக் காவலர் அவனை ஒரு வழியாக துரத்தி பிடித்து அவனை அடித்து அவனது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அவனது பெற்றோர்களிடம் அச் சிறுவனின் அடாவடி செயலை கூறி கண்டித்து வையுங்கள் என்று வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டிற்கு சென்றது தான் தாமதம் பள்ளியிலிருந்து அழைப்பு , நீங்கள் அடித்த சிறுவன் பள்ளியை விட்டு ஓடி விட்டான் எங்கு என்று தெரியவில்லை. என, கிலி பிடித்து விட்டது போலீசாருக்கு சிறுவனை நாலாபக்கமும் போலீஸ் பாணியில் வலை வீசி பிடித்து விசாரித்தால் நீங்கள் அடித்ததால் நான் ஓடி விட்டேன் என்று கூறியுள்ளான். அவனை பிடித்து இனி அடிக்க மாட்டேன்எனகூறி இனிப்பு வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்து பள்ளியில் அவனை அமர வைத்து விட்டு அவனது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரிடம் பள்ளியில் உட்கார வைத்து விட்டேன். இனி அந்த சிறுவன் தொலைந்து போனால் எனக்கு தெரியாது என்று உத்திரவாதம் வாங்கிக் கொண்டு விட்டு இன்று யார் முகத்தில் முழித்தோம் என்றே தெரியவில்லை காவல்நிலையத்தில் இருந்தால் யாரிடமாவது மாமூலாவது தேறியிருக்கும் இன்று இந்த பையனால் இவ்வளவு பிரச்சினை ஆகி விட்டதே என்று நொந்து கொண்டு வீடு சென்று விட்டார்.
சம்பவம்- 2
நேற்று எனது மனைவி ப்ணிபுரியும் தனியார் மெட்ரிக் பள்ளி ( கவனிக்கவும் தனியார் பள்ளி) 7ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் அவனது வகுப்பு ஆசிரியர் அவரது பெயர் ராஜசேகர் , அவரை பார்த்து நாய் சேகர் நாய் சேகர் என அவனும் அவனது மாணவர்களும் பரிகசித்துள்ளனர். ஆசிரியரின் காதில் விழுந்தவுடன் பையனை 4 சாத்து சாத்து பெற்றோரிடம் முறையிட்டு பையனை கண்டித்துள்ளனர். ஏன் அவ்வாறு கூறினாய் என பையனிடம் கேட்டதற்கு நடிகர் வடிவேலு ஏதோ ஒரு படத்தில் நாய் சேகர், நாய் சேகர் என கூறுவாராம். அதனை பார்த்து கூறினேன் என்றானாம்.
சம்பவம்-3
எனது மனைவி ஒரு தனியார் பள்ளியில் (மெட்ரிக் பள்ளி) கணித ஆசிரியராக பணிபுரிகிறார்.
வாரம் தோறும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு மாணவர்களின் கல்வி நிலை குறித்து நடப்பது வழக்கம்.
வழக்கம் போல் நடந்த சந்திப்பில் ஒரு மாணவியின் தகப்பனார் மாணவி இரண்டு பாடங்களில் பெயில் ஆகியிருப்பதை குறிப்பிட்டு அந்த மாணவியையை ஆசிரியர்கள் முன்பு அழைத்து ஏன் இப்படி இருக்கிறாய், உனக்கு எவ்வளவு பீஸ் கட்டுகிறேன் என்று எல்லாம் டயலாக் அடித்து விட்டு
மேலும் நீ நல்ல முறையில் படித்து பாஸ் செய்தால் தான் இந்த ஆசிரியர்களுக்கு எல்லாம் ரூ. 500/- ரூ. 1000/-இன்கிரிமெண்ட் தருவார்கள். இல்லையென்றால் ஆசிரியர்கள் பாவம், என்று அந்த மாணவியின் முன்பே ஆசிரியர்களை பார்த்து ஏளனம் செய்யும் தொணியில் பேசியுள்ளார். அதற்கு என் மனைவி உள்பட அனைவரும் வாய் திறவாது பேசமாமல் மௌனித்துள்ளனர்.
இந்த மூன்று சம்பவங்களின் மூலதாரப் பிரச்சினை என்ன ?
பொறுப்பற்ற ஊடகங்கள் மற்றும் பொறுப்பில்லாத வளர்ப்பு சூழலை ஏற்படுத்தி தரும் நமது பெற்றோர்கள் தான் என நான் எண்ணுகிறேன்
4வது படிக்கும் சிறுவன் போலீசாரை எண்ணி நகையாடுகிறான். காவல் துறை யினரை பற்றி நமது ஊடகங்கள் காண்பிக்கும் லட்சண்ம் அப்படி
காவல்துறையினர் என்றால் ஜோக்கர்கள் போலவும், அதேபோல ஆசிரியர்கள் என்றால் கேணயன்கள் என்று திரைபடங்களிலும் காண்பித்தால் இளைய சமுதாயம் எவ்வாறு உருப்படும். ஆசிரியர்களின் மீது அவர்களுக்கு என்ன மரியாதை ஏற்படும். தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நிலை தான் ஒரளவு கௌரமாகவும் மாணவர்களிடம் மரியாதையாக உள்ளது என நினைத்தால் அந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மீது வைத்துள்ள மரியாதை லட்சணம் எவ்வாறு உள்ளது பார்த்தீர்களா
அந்த காலத்தில் ஆசிரியர்கள், காவல்துறையினர் என்றால் சமுதாயத்தில் நல்ல மரியாதை இருக்கும். தவறு இரு பக்கமும் இருக்கிறது.ஒரு பக்கம் ஊழலில் திளைக்கும் காவல்துறை, மறு பக்கம் கந்து வட்டி மற்றும் பிஸினஸ் புரிந்துக் கொண்டு வாழும் ஆசிரியப் பெருந்ததைககள், மற்றும் பொறுப்பில்லாத ஊடகங்கள். பாவம் நமது இளைய தலைமுறை மற்றும் குழந்தைகளின் எதிர்கால நிலை கடவுள்தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்.
வேதனையுடன்-துர்வாசர்.
No comments:
Post a Comment