அண்ணலே தங்களின் இன்னொரு பிறந்த நாளன்று உங்களை நெஞ்சார இத்தேசம் நினைவு கூறுகிறது
ஆனால் அண்ணலே நீங்கள் கண்ட கனவு இந்து முஸ்லீம் ஒற்றுமை என்பது இத்தேசத்தில் நிகழ வாய்ப்பு இனி எக்காலத்திலும் இராது என நினைக்கிறேன். கடந்த 4 மாதங்களில் மட்டும் நமது பாரத தேசத்தில் குண்டு வெடிப்பு காரணமாக 165 பேர் மரணம் . காய்கறி வாங்கச் சென்றவர்களும் பால் வாங்கச் சென்றவர்களும், பச்சிளம் பாலகர்களும் இந்த நீசத்தனமாக செயலின் காரணமாக மடிகிறார்கள் என்ன கொடுமை , தற்போதைய பிரச்சினை என்னவென்றால் நமது கையாலாகாத வாய்மூடி மெளனித்துள்ள நமது அரசாங்கத்திற்கும் சிமி போன்ற தீவிர வாத இயக்கங்களுக்கும் இடையே தான்
இந்து முஸ்லீம் இடையே அல்ல. ஆனால் சிறு பான்மையினரை வாக்கு வங்கியினை குறி வைக்கும் நமது நடுவண் அரசு வாய் மூடி தீவிரவாத செயலை வேரோடு மண்ணாக அழிக்க தயங்குகிறது .
இந்தியாவில் இவ்வாறு வீதியில் அநாதைகளாக சாகத்தான் நாம் பிறந்தாமோ என்ன? எந்த முகத்துடன் இளைஞர்களை பார்த்து பாரதத்திற்கு உங்கள் சேவையைபுரியுங்கள் வெளிநாடு செல்லாதீர்கள் என்று கற்றறிந்த இளைஞர் சமுதாயத்தை பார்த்து நாம் கேட்க முடியும்.
வெட்கம் கெட்ட உள்துறை அமைச்சர் ஒவ்வொரு முறையும் குண்டு வெடிப்பு நடந்த பிறகு கண்டன அறிக்கை மட்டும் தெரிவித்து விட்டு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். அரசாங்கத்தின் மீது கோபம் என்றால் இந்த சிமி இயக்கத்தினர் நாடாளுமன்றத்தை தகர்க்கட்டும் குண்டு துளைக்காத கார்களில் அவர்களது உயிர் மட்டும் கெட்டி என்று நடமாடும் இந்த அரசியல் வியாதிகளை துளைக்கட்டும் அப்பாவி பொது மக்கள் என்ன பாவம் செய்தார்கள். இந்த லட்சணத்தில் அடுத்த இலக்கு சிங்கார சென்னையாம், அய்யா இதை வேறு பெருமையாக பீற்றிக் கொள்கிறீர்கள் சிறிதும் வெட்கம் இல்லாது, எப்போது தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கிறார்களோ எப்போது உடனுக்குடன் விசாரித்து கடுமையான தண்டனை கொடுக்கிறார்களோ எப்போது தீவிரவாதத்தின் ஆணி வேர் வரை நமது பாரதத்தின் வலிமையை பறை சாற்றும் வகையில் பதிலடி தருகிறார்களோ அப்போது வரை காந்தி பிறந்த நாளோ அல்லது ஆகஸ்ட் 15, ஜனவரி 26 தினங்களை நினைவு கூற நமக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை .
அன்புடன்-துர்வாசர்
No comments:
Post a Comment