நேற்று நமது மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காட்டார் அவர்கள் இனி ஆறரை மணி நேர மின்வெட்டு அமுலில் இருக்கும் என்று அறிவித்து விட்டார். அதை நமதுதமிழக மின்வாரிய சேர்மன் மச்சேந்திரநாதன் இ.ஆ.ப. அவர்கள் உறுதி செய்துள்ளார்கள். நேற்று இரவு செய்தியில் புதியதாக மின் உற்பத்தியை பெருக்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் இடப்பட்டு இருப்பதாக நமது மு.க. அவர்களும் ஆற்காடு பெருந்தகையும் கோட்டு சூட்டு அணிந்த கனவான்களுடன் கைகுலுக்கி ஒப்பந்தம் இட்டார்களாம். புரிகிறதா இதிலிருந்து ஏதாகிலும் உங்களுக்கு, காலையில் மின்வெட்டு அமுல்படுத்தும் நேரம், மாலையில் புதிய உற்பத்தி திட்டம் யாரை ஏமாற்ற இந்த நாடகம் , கடந்தமூன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்தீர்களே அப்போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மண்ணாங்கட்டி தெருப்புழுதி அனைத்தையும் இட்டு மின் உற்பத்தியினை அதிகரித்திருந்தால் இவ்வாறு குளிர் காலத்தில் கூட தமிழக மக்கள் அவதியுற நேர்ந்திராதே. கண் கெட்ட பிறகு தான் சூரிய நமஸ்காரம் போலும். இந்த லட்சணத்தில் நமது ஆற்காட்டார்இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக வரும் தேர்தலில் தோற்றால் அதற்கு முக்கிய காரணம் மின்வெட்டு தான் இருக்கும் என்கிறார். இந்த வருடத்தின் சிறந்த ஒப்புதல் வாக்குமூலம் இது தான் என நினைக்கிறேன். அவர்களுக்கு நன்கு புரிந்து உள்ளது. அடுத்த முறை நாம் நிச்சயம் தேற மாட்டோம் பூட்ட கேஸ் தான் என்று, என்ன செய்ய நமது தலையெழுத்து பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று போக வேண்டியது தான், கோடையில் மின்வெட்டு என்பது சகஜம், ஆனால் கடந்த 6 மாத காலமாகவே மின்தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டே உள்ளது. அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அறிவிக்கப்படாத மின்தட்டு (இதுகலைஞர் அறிவிப்பு) என நீடித்துக் கொண்டே உள்ளது. பின்னாலடை உற்பத்தியாளர்கள், சிறு குறு தொழில்புரிபவர்கள், அனைவரும் இந்த மின் தட்டுப்பாடு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை தமிழ்நாட்டு மக்கள் மின்வாரியத்திற்கு எதிராக ரோட்டில் வந்து மறியல் செய்தது இந்த முறை தான் எனநினைக்கிறேன். தினமும் செய்தித்தாளை வாசித்தாலே இது புரியும், ஆனால் நமது ஆட்சியாளர்களோ நமீதா நடித்த படத்தின் ஆடியோ ஆல்பம் ரீலிஸ் , சினிமா கலைஞர்களுக்கு பரிசளிப்பு விழா என்று நேரம் செலவழிப்பதிலே குறியாக இருக்கிறார்கள் (குத்தாட்டம் அதிலும் நமீதா நிச்சயம் ஆட வேண்டும், ) என்ன செய்ய நமது தலையெழுத்து, அனுபவித்த தீர வேண்டும் எனநினைக்கிறேன்.
வேதனையுடன்
துர்வாசர்
No comments:
Post a Comment