நமது மாண்புமிகு தானைத் தலைவி கனிமொழி எம்.பி. அவர்கள் நேற்று வாய் மலர்ந்து அருளிய வார்த்தைகள் என்னதெரியுமா,
தேவாரம், திருவாசகம், திருப்புகழ் என்று கூறி தமிழர்கள் சீரழிந்துக் கொண்டு இருக்கிறார்கள். என்ன ஒரு அரிய கண்டு பிடிப்பு, பிதற்றலின் உச்சகட்டமாக இது இல்லை. தேவாரம் திருவாசகம் ஒன்றும் அவரது தகப்பனார் கூடவே ஜால்ரா போட்டு திரியும் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசமோ அல்லது சரோஜாதேவி டைப் இலக்கியமோ கிடையாது பெருந்தகையீர் . தேவாரம் திருவாசகம், திருப்புகழ் எழுதியது யார், அதில் உள்ள சாராம்சம் என்ன வென்று உங்களது தகப்பனாரின் அருகில் ஜால்ரா அடித்துக் கொண்டு இருக்கும் தமிழறிஞர்களை கேளுங்கள் அவர்கள் விளக்கிக் கூறுவார்கள்.
திருவாசகம் மொழி பெயர்த்து எழுதிய ஜி.யு.போப் என்ற மேலைநாட்டு அறிஞர் அதை மொழி பெயர்க்கும் போது ஒரு நாளைக்கு ஒரு பக்கத்திற்கு மேல் மொழி பெயர்க்க இயலவில்லை என்று கூறினார். காரணம் என்ன தெரியுமா மொழி பெயர்க்கும் போதே கண்ணில் தாரை தாரையாக நீர் வழிந்து அந்த பக்கத்தை அழித்து விடுமாம். என்ன செய்ய அந்த அறிஞர் சீரழிந்தவர் உங்கள் பாஷையில், தேவாரம், திருவாசகம் எல்லாம் காலத்தால் அழிக்க முடியாத செல்வங்கள். உங்களைப் போல் உள்ளவர்கள் அதை விமர்சனம் செய்ய இந்த தமிழ்நாடு என்ன பாவம் செய்ததோ, தகப்பனார் வழி எவ்வழியோ, புதல்வி வழியே அவ்வழி போலும், கூடவே குரான், பைபிள் படித்து சீரழிந்து வருகிறார்கள் என்று உங்கள் தகப்பனாருடன் சுற்றித் திரியும் எஸ்ரா சற்குணத்திடமும், உங்கள் கவிக்கோ அப்துல் ரகுமானிடம் கூற வேண்டியது தானே. என்ன கொடுமை சார் இது இதையெல்லாம் நாம் சகித்துக் கொள்ள வேண்டியது உள்ளது. எல்லாம் வல்ல இறைவனே இந்த உளறல்களையும் மேலும் சகித்துக் கொள்ள எனக்கு நல்ல வல்லமை தாரீர்
-துர்வாசர்.
concentrate more on your inner world that will help you to understand the world
ReplyDelete