Saturday, December 13, 2008

நெஞ்சு பொறுக்குதில்லையே

ஆயிற்று மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு மற்றும் 3 நாட்களாக நடந்த போராட்டத்தின் விளைவு தீவிரவாதிகளுக்கும் கமாண்டோக்களுக்கு இடையே நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக குறைந்தது 4000 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. 200 உயிர்கள் பலி வாங்கப்பட்டுள்ளன. வழக்கம் போல் நமது அரசியல் வியாதிகள் கண்ணீரும் கம்பலையுமாக கன்டனம் தெரிவித்து விட்டனர். நமது மனமோகன சிங்கம் வழக்கம் போல உப்பு சப்பில்லாமல் சுரத்தில்லாமல் தொலைக்காட்சியில் வழ வழ கொழ கொழ என்று ஒரு அறிக்கை விட்டு விட்டார். ஆனால் இந்த முறை நமது மீடியாக்கள் நடத்திய உச்ச கட்ட திமிர்தனத்திற்கு எந்த அரசியல் வியாதிகளும் கண்டனம் தெரிவிக்கவே இல்லை. ஏனென்றால் மீடியாக்களின் ஆதரவு அவர்களுக்கு வேண்டும். கையில் மைக் இருக்கிறது, 25 வயதிற்குள் பெண்கள் இருக்கிறார்கள் சாட்டிலைட் இருக்கிறது என்று அவர்கள் செய்த உச்ச கட்ட ஆணவப்போக்கு வியாபாரப்போக்கிற்கும் நானும் மும்பை சம்பவம் நடந்து முடிந்து யாராகிலும் ஒரு அரசியல் வியாதியாவது தேசிய தலைவராவது கண்டனம் தெரிவிப்பார்கள் என காத்திருந்தேன். ஆனால் ஒருவர் கூட கன்டனம் தெரிவிக்கவில்லை. தீவிரவாதிகளுக்கு முழு முச்சில் உதவி செய்வதே அவர்களின் பிறவிப்பயன் வாழ்க்கை லட்சியம் என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டார்கள். என்ன கொடுமை இது, படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் அய்யோ என்று போவான் என்று கூறிய பாரதி வார்த்தை தான் மீண்டும் நினைவிற்கு வருகிறது. இவர்களின் குடும்பத்தார்கள் யாராகிலும் தாஜ் ஹோட்டலில் அல்லது நரிமன் ஹவுஸ்ல் மாட்டிக் கொண்டு இருந்தால் இவர்கள் இவ்வாறு தான் மைக்கும் கையுமாக நியூஸ் கொடுத்துக் கொண்டு இருப்பார்கள் மனசாட்சியுடன் சிந்தித்து பார்க்கட்டும். அமெரிக்கா குண்டு வெடிப்பின் போது மீடியாக்கள் அந்த அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தன. ஆனால் நமது நாட்டில் என்ன நடக்கிறது. யாருக்கும் வெட்கமில்லை, யாருக்கும் பொறுப்பு இல்லை, இதில் நாங்கள் தான் நியூஸ் முந்தித் தருகிறோம் என்ற வெட்டி பீத்தல்கள் வேறு இதில் இவர்கள் அரசியல் வியாதிகளை குறை கூறுகிறார்கள். இந்த சமயத்தில் கூட அத்வானியும் மன்மோகன் சிங்கும் ஒன்றாக வரவில்லை. என்று , முதலில் இந்த கார்த்திகை மாதத்து நாய்கள் ஒன்று சேரட்டும் பிறகு அவர்களை குறை கூறட்டும். மேலும் ஒவ்வொரு முறை குண்டு வெடிப்பின் போது பலியானது அப்பாவி சாமான்யர்கள் , ஏழை பொது ஜனங்கள் அதனால் மும்பை விழித்துக் கொண்டு விட்டது, ஜெய்பூர் நிமிர்ந்து விட்டது. நாங்கள் துணிந்தவர்கள் என்று ஸ்பிரிட் ஆப் மும்பை, என்று இதே மீடியாக்கள் துக்கம் நடந்த 2 நாளே பீற்றிக் கொண்டு அலையும். ஆனால் இன்னமும் தற்போது நடந்த சம்பவத்தை பற்றி துக்கம் விசாரித்துக் கொண்டு உள்ளன மீடியாக்கள். என்ன காரணம் சற்றே யோசித்து பாருங்கள் தற்போது இறந்தவர்கள் எல்லோரும் தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள். நரிமன் ஹவுஸ் தங்கியிருந்தவ்ர்கள். அவர்கள் அனைவரும் பணக்காரர்கள் . மேல் தட்டு வர்க்கத்தினர், அவர்களின் தயவு அரசியல் வியாதிகளுக்கு தேவை, அரசியல் வியாதிகளின் தயவு நமது சோரம் போன மீடியாக்களுக்கு தேவை அதனால் தான் இந்த கூப்பாடு கூச்சல் எல்லாம், தேசமே ஒன்று திரளுங்கள், என்று அமீர்கான் முதல் அமிதாப் வரை கூக்குரலிடுகிறார்கள். மும்பை ரயில் நிலையத்தில் தான் முதலில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். ஆனால் அதைபற்றிய டிவி கிளிப்பிங் கூட இல்லை. ஏனென்றால் ரயில் நிலையத்தில் இறந்தவர்கள் சாமான்யர்கள் நம்மைபோல, அவர்களுக்கு அக்கறை எல்லாம் பணக்காரர்கள் மேல் மட்டும் தான் , ஏன் இந்த பாரபட்சம், கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. எழவு வீடு என்றால் பிணமாக இருக்க வேண்டும். கல்யாண வீடாக இருந்தால் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்று அதுபோல் தான் மீடியாக்களின் செயல்பாடு உள்ளது.
இதற்கு பின்னூட்டமாக விளைந்த விழைவு அதை விட பெரிய கொடுமை சிவராஜ் பாட்டிலீன் மந்திரி பதவி காலியாக நமது சிவகங்கை சிதம்பரம் உள்துறை பொறுப்பு வகித்திருக்கிறார். இதை விட பெரிய கொடுமை எதுவும் இருக்க இயலாது. ஏற்கனவே நிதிதுறை சீரழித்து நமது பாரத தேசம் எங்கோ போய் கொண்டு உள்ளது. பாவம் உள்துறை என்ன பாடுபடபோகிறதோ என்னமோ, ஆனால் கடந்தஒரு வாரகாலமாக அவர் குண்டு வெடிப்பு நடந்த சம்பவங்களுக்கு எல்லாம் பார்வையிடுகிறார். பார்ப்போம் என்ன செய்கிறார் என்று, ஆனால் இன்னமும் எனக்கு நம்பிக்கையிருக்கிறது. பாரத தேசத்தை எந்தவொரு தீவிரவாதியும் அசைத்து விட முடியாது என்று, ஆனால் இந்த அரசியல் வியாதிகளின் அலட்சியப்போக்கினால் இன்னமும் அதற்கு என்து அருமை சகோதர சகோதரிகளை எத்தனை பேரை பலியிடப் போகிறார்களோ என்ற வருத்தம் தான் எனக்கு
மிகுந்த தாளாத மனச்சுமையுடன் வேதனையுடன்
துர்வாசர்


No comments:

Post a Comment