Wednesday, February 18, 2009

நெஞ்சுப்ொறுக்குதில்லையே

நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த கன்றாவி கூத்துக்களை கவனித்தீர்களா தோழர்களே கடந்த 5 வருட காலமாகவே இந்த வழக்குரைஞர்கள் செய்யும் அழிச்சாட்டியத்திற்கு அளவே கிடையாது. எதற்கெடுத்தாலும் கோர்ட் பாய்காட் நடுரோட்டில் வன்முறை, என்னவோ இவர்களுக்கு மட்டும் தான் தமிழ் உணர்வு பொத்துக் கொண்டு உள்ளது போல நேற்று நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சேம்பரிலேயே நீதிபதிகளின் முன்பு சுப்ரமணியம் சாமி மீது அழுகிய முட்டை எடுத்து அடித்திருக்கிறார்கள். நீதிபதிகள் வெட்கி தலை குனிகிறார்கள். நீதிபதிகளின் முன்பு அவர் தஞ்சம் அடைந்துள்ளார். அதற்கு எந்தவிதமான பாதுகாப்பும் கிடையாது. அவர் என்ன உல்பா தீவிரவாதியா கொலைக் குற்றவாளியா, ஜனநாயக நாட்டில் அவருக்கு என்று அவருடைய கருத்துக்களை கூற அவருக்கு உரிமை கிடையாதா என்ன? ஒரு கேஸை எடுப்பதும் நிராகரிப்பதும் வக்கீல் என்ற உரிமையில் அவருக்கும் உரிமை உள்ளதா இல்லை, அது உயர்நீதிமன்றமா இல்லை டுமீல் குப்பமா என்று தெரியவில்லை பிளேடு பக்கிரி, அரிவா மணி போன்றவர்கள் தான் வக்கீலாக இருக்கிறார்களா தெரியவில்லை. கடந்த தலைமுறைகளில் உயர்நீதிமன்றத்தை சிறப்புடனும் பெருமையுடனும் பராமரித்த வக்கீல்கள் அனைவரும் இச் செயல்கண்டு வெட்கி தலைகுனிய வேண்டியது தான், கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த வக்கீல் பெருந்தகைகள் சென்னை மெயின் ரோட்டில் ஒரு அப்பாவி மனிதரின் சைக்கிள் கடையை அடித்து துவம்சம் செய்து கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்த கதையாக அங்கிருக்கும் சிறு குழந்தைகளுக்கும் இலவச சைக்கிள் விநியோகம் செய்ததை நாம் அனைவரும் அறிந்தோம். இதை யாரும் எந்த அரசியல் கட்சியும் கண்டிப்பதாக தெரியவில்லை. வக்கீல்கள் என்றால் என்ன இரண்டு கொம்பா முளைத்திருக்கிறது. அவர்களுக்கும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தானே அவர்களுக்கு மட்டும் என்ன தனி சட்டமா ,
இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை, ஆனால் நடப்பது எல்லாம் நல்லதற்கில்லை
துர்வாசர்


No comments:

Post a Comment