ஆஸ்கர் விருது வாங்கியிருக்கும் நமது சென்னை இசையமைப்பாளர் திருஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் அவரின் கடின முயற்சிக்கும் விரிவான வீச்சுக்கும் கிடைத்த பரிசு இது. சில படங்கள் ஹிட்டானவுடனே தலைக்கு பின்னால் ஆரா(ஒளிவட்டம்) வளர்த்துக் கொண்டு திரியும் திரையுலகில் நிதானமாக ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று சமர்ப்பிக்கும் பக்குவத்தை இந்த இளம் வயதில் பெற்றிருப்பதை நிச்சயம் அவரின் ஆஸ்கர் பரிசுக்கு மேலான பரிசாக கடவுள் வழங்கியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இந்த தருணத்தில் ஒரு சிறிய நெருடல் என்னவென்றால் ஆயிரம் பேர் வாழ்த்து கூறினாலும் இளையராஜா அவர்கள் தனது சிஷ்யனுக்கு வாழ்த்து ஏன் கூறவில்லை, ஆயிரம் கேள்விகள் ம்ம்ம்ம்
-துர்வாசர்
No comments:
Post a Comment