Friday, April 24, 2009

யாருக்கு கிடைக்கும் இந்த அரியாசனம்

நமது பெரிய பாரத தேசத்தின் திருவிழாவான தேர்தல் களை கட்ட ஆரம்பித்து விட்டது। தினமும் சன்டைகள் வம்புகள் சச்சரவுகள், நீ பலவீனமானவர்। நீ ஆர்எஸ்எஸ் அடிமை, நீ இத்தாலிகாரி, நீ சம்பாதித்தது எனக்கு தெரியாதா, ஒரு மாநில முதல்வரை பார்த்து அவர் பெண் என்ற காரணத்தினாலேயே உனக்கு முத்தம் கொடுக்க ஆசை என்று ஒரு கொழுப்பு எடுத்த நடிகரின் உளறல் , எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாடிய புலவன் மட்டும் இன்று உயிருடன் இருந்தால் அவ்வாறு பாடியிருப்பானா என்று தெரியவில்லை। ஒவ்வொரு முறையும் தேர்தல் தோறும் தவறாது தனி மனித வசைகள் அதிகம் வருகிறது। இதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை। உளவியல் ரீதியாக தனி மனித வசைகள் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் போலும்। நான் மட்டும் என்ன எனது பிளாக்கிலேயே எத்தனை மனிதர்களை இவ்வாறு தனி மனித வசைகளில் திட்டியிருப்பேன்
ஆனால் இதை யெல்லாம் ரசித்துக் கொண்டு வாழும் கலை நமக்கு தெரிந்திருக்கிறது। அதற்கு நன்றி இறைவா
நட்புடன்
துர்வாசர், தம்மம்பட்டி


No comments:

Post a Comment