எங்கள் பகுதி வாழ் அரசு ஊழியர்கள் அதிலும் குறிப்பாக ஆசிரியப் பெருந்தகைகளுக்கு சொல்லொணாத மகிழ்ச்சி வெள்ளம், கலைஞர் ३० சதவிகிதம் சம்பள உயர்வு அறிவித்துள்ளார்। என்ன தயாள குணம், அவருக்கு என்று ஒரே பாராட்டு மழை, நிச்சயமாக பொது மக்கள் யாருக்கும் இதில் எந்த ஒரு வித பொறாமையோ எதுவும் கிடையாது। அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் உங்கள் எல்லைக்குள் மூடத்தனமான குறுநில மன்னர் போல் நடந்துக் கொள்ளாது செவிகளையும், விழிகளையும் திறந்து வைத்துக் கொண்டு அலுவலக நேரத்தில் வெட்டி அளப்பு அளக்காமல் தங்கள் கடமையை செய்யுங்கள் அதற்கு பிறகு உங்களுக்கு சேர வேண்டிய உயர்வை தாராளமாக பெற்றுக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறார்கள்। எனது ஆசிரிய நண்பர் ஒருவர் ஆயிற்று சம்பள உயர்வு வந்தாலும் வந்தது பொது மக்கள் எங்களைத் தான் கரித்துக் கொட்டுவார் என்று அங்கலாய்த்தார்। இதற்கு என்ன காரணம் என்று யோசியுங்கள் வாத்தியாரே என்றேன், ஒரு காலத்தில் ஆசிரியர் எளிமைக்கு உதாரணமாக திகழ்ந்தார்। அந்த எளிமையிலும் அவரது கடமையை செவ்வனே செய்து வந்தார்। மாணாக்கரின் முன்னேற்றத்திற்கு உரமாக திகழ்ந்தார்। ஆனால் தற்போது எங்கள் ஏரியா ( தம்மம்பட்டி) அரசு பள்ளியில் பள்ளி படிப்பை ஆரம்பிக்க இருக்கும் அதாவது 6ம் வகுப்பு மாணவன் ஒருவனை அழைத்து அவனது வீட்டு முகவரியை எழுத்ச் சொன்னால் நிச்சயமாக அவனுக்கு எழுதத் தெரியாது। அந்த லட்சணத்தில் நமது ஆரம்ப பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறமை இருக்கிறது। ஆனால் இன்றோ ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் குறைந்தது 15000 சம்பளம் மற்றும் சலுகைகள், எனக்கு தெரிந்து எங்கள் ஏரியா ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் பல பேரிடத்தில் நான்கு சக்கர வாகனம் கூட இருக்கிறது। நிச்சயம் அவர்களும் வாழ்க்கையை என்ஜாய் செய்யட்டும், யார் வேண்டாம் என்றது, ஆனால் அவர்கள் கடமையை சரிவர செய்கிறார்களா என்று அவர்களது மனசாட்சியை தொட்டு பார்த்துக் கொள்ளட்டும்,
மீண்டும் பாரதி கூறியது தான் நினைவுக்கு வருகிறது, படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் அய்யோ என்று போவான் என்பது தான், அது எனவே அவரவர்கள் கடமையை தவறாது செய்யுங்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கூறிக் கொள்வது இது தான், நியூட்டனின் 3வது விதி உங்களுக்கும் பொருந்தும், நீங்கள் கடமையை சரி வர செய்யவில்லை எனில் அதன் பின் விளைவை எப்படியாகிலும் நீங்கள் அனுபவித்தே தீர வேண்டும்।
அன்புடன்
துர்வாசர்-தம்மம்பட்டி
No comments:
Post a Comment