நேற்று எனது மனைவி பணிபுரியும் தனியார் மெட்ரிக் பள்ளியில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்।
3ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்லும் பேருந்தில்ஏற மறுக்கிறான்। வீட்டில் பெற்றோர்களும் கண்டிக்கின்றனர்। கட்டாயப்படுத்தி பேருந்தில் ஏற்ற முயற்சிக்கின்றனர்। அந்தஏரியா வில் இருந்து பள்ளி வரும் தமிழ் ஆசிரியர் அச் சிறுவனை பேருந்தில் ஏற முயற்சிக்கிறார்। ஆஹா என்ன ஒரு அற்புதம், அந்த சிறுவன் தமிழாசிரியரின் கையை கடித்து விட்டான்। தமிழாசிரியர் உடன் மருத்துவமனை விரைந்து செப்டிக் ஆகாமல் இருக்க ஊசி மருந்து எடுத்துக் கொள்கிறார்। இதுபோல் அவனது பெற்றோர்களையும் பலமுறை கடித்துள்ளான் அச் சிறுவன், நமது தமிழாசிரியர் கடி வாங்கிக் கொண்டு இருடா உன்னை பிரின்ஸிபலிடம் கூறி டிசி கிழித்துக் கொடுக்கச் சொல்கிறேன் என்று கூறியதற்கு உடனே அச் சிறுவன் மறுதலித்து கூறிய பதில் என்ன தெரியுமா,
யோவ் டிசியை கிழிக்காமல் கொடு ஏன் என்றால் எனது தகப்பனார் ரூ.2000 பணம் கட்டியுள்ளார் டிசி கிழிக்காமல் முழுவதாக என் கையில் கொடு, இன்னொருமுறை இப்படி பலாத்காரமாக வேனில் ஏற்றினால் இன்னும் பலமாக கடித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளான்। தமிழாசிரியருக்கு என்ன சோதனையோ , கடி வாங்கியது தான் மிச்சம், 3ம் வகுப்பு படிக்கும் மாணவனின் எதிர் வினை என்னை புல்லரிக்க வைத்து விட்டது, மீடியாக்களின் தாக்கத்தினால் குழந்தைகள் மனதில் எவ்வாறு இப்படி வன்முறை தோன்றுகிறது பார்த்தீர்களா
வேதனையுடன்
துர்வாசர்,தம்மம்பட்டி
No comments:
Post a Comment