Friday, October 9, 2009

அஞ்சலி-அகாலமரணம்

கடந்த ३ நாட்களாக எனது மனதும், மனநிலையும் ஒரு நிலையில் இல்லை। , எனது நண்பரும் பத்திர எழுத்தருமான திரு கருணாநிதி (வயது35) நேற்றைய முன்தினமான வியாழன் அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது எனக்கு மிகுந்த வேதனையும் துயரையும் தந்தது , சாலையில் அனாதையாக அடிபட்டு கிடந்துள்ளான் என்று எனக்கு முதலில் சாலையில் சென்ற ஒரு நல்ல நண்பரிடமிருந்து அலைபேசியில் வந்த நொடி முதல் அவனை108வண்டியில் அழைத்து தகுந்த முதல்உதவி செய்து ஈரோடு கோவை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி உயிர்இழந்த பொழுது வரை யில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை , இதற்கும் அவனுக்கு திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது। போன செப்டம்பர் 5ம் தேதி திருமணம் , அவனது மனைவியின் நிலையை நினைத்தால் உள்ளம் குமுறுகிறது। எங்கள் பகுதி மக்கள் அனைவருக்கும் அவனின் இறப்பு மிகுந்த வலியும் பெருத்த அடியாகவும் வேதனையூட்டும் வகையில் இருந்தது காரணம் எல்லோருக்கும் எப்படியாவது ஒரு விதத்தில் அவன் உதவி புரிந்துள்ளான்। இடுகாட்டிற்கு அவனது பின்னால் வந்த கூட்டமே அதை நிரூபித்தது। என்ன செய்ய இந்த துக்கத்திலிருந்து மீள எனக்கு குறைந்தது சில காலம் பிடிக்கும்
வேதனையுடன் ஆற்றொணாத துயரத்துடன்
ராகவேந்திரன்,தம்மம்பட்டி


No comments:

Post a Comment