நேற்று இந்தியா பாகிஸ்தான் மேட்ச் , வழக்கம் போல் நமது ஆசாமிகள் சொதப்பி விட்டார்கள்। நிச்சயம், டிராவிட்-ஐ டீமை எடுத்து விடுவது தான் உத்தமம், கடந்த சில வருடங்களாகவே ஒரு நாள் போட்டிகளில் ஒரு மேட்ச் வின்னிங் பர்மான்ஸ் அந்த ஆசாமியிடமிருந்து இருக்கிறதா என்று பார்த்தால் நிச்சயம் சந்தேகம் தான், அது மட்டுமின்றி, டிராவிட் , டெண்டுல்கர் போன்றவர்கள் எப்போதும் சேஸிங்-ல் அதுவும் முக்கியமான மேட்சுகளில் எவ்வாறு சொல்லி வைத்தது போல் சொதப்புகிறார்கள் என்ற சூட்சுமே எனக்கு புரிய வரவில்லை, இரண்டு மணி வரை கண்விழித்து இரண்டு கண்ணும் வெளியே வந்தது தான் மிச்சம்,
ஆனால் சுரேஷ் ரெய்னாவினை ஒன்டவுனாக ஏன் அனுப்பவில்லை என்று தெரியவில்லை, எனக்கு தெரிந்த அனைத்து விமர்சகர்களும் சுரேஷ் ரெய்னாவினை ஒன் டவுனாக அனுப்புங்கள் என்று கரடியாக கத்தி வருகிறார்கள், அது மட்டுமின்றி இந்த சோயப் மாலிக் வேறு இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டோடும் ரன் எடுக்காமல் வடிவேலு பாணியில் சொல்வதென்றால் நம்ம ஆட்களை வைத்து தான் காமெடி செய்கிறார் , பார்ப்போம் நமது சிங்க குட்டிகள் அடுத்த மேட்சில் என்ன செய்கிறார்கள் என்று
துர்வாசர், தம்மம்பட்டி
No comments:
Post a Comment