வழக்கம் போல் இந்த வருடம் தீபாவளி(வலி) ஓடி போய் விட்டது। எனக்கு இந்த வருடம் எனது நெருங்கிய நண்பனின் மரணம் காரணமாக கொண்டாட்டத்தில் நாட்டம் இல்லாமற் போயிற்று, எனது குமாரன் ஹர்ஷவர்த்தன் மட்டும் வழக்கமான உற்சாகத்தில் கொண்டாடினான், ஸ்டேண்ட்ர்ட் கம்பெனியின் புஸ்வாணம் கூட வெடிக்கிறது, எனது குமாரன் பயந்து போய் இனி புஸ்வானமே வெடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், பட்டாசு தயாரிப்பாளர்களே ஒரு புஸ்வானத்தின் விலை ரூ।20வாங்குவதில் மட்டும் குறியாக இருக்காதீர்கள் அதை தரமாக தயாரிப்பதிலும் உங்களுக்கு அக்கறை இருக்கட்டும், இதற்கும் ஒரு பாக்ஸில் 10உள்ளதில் கிட்டத்தட்ட 3க்கு மேல் இவ்வாறு வெடித்து விட்டது என்ன தயாரிப்பு குறைபாடோ தெரியவில்லை,
மேலும் இன்று செய்தித்தாள் பார்த்து நெஞ்சு கனத்தது தான் மிச்சம் ३२ பேர் பலி, பள்ளிப்பட்டு கிராமத்தில் என்றுதான் அரசாங்க அதிகாரிகள் திருந்துவார்களோ, இந்தியாவில் உயிரின் விலைக்கு மரியாதை இல்லை என்று பல சம்பவங்கள் நிரூபித்து கொண்டே உள்ளன
-ராகவேந்திரன்,தம்மம்பட்டி
No comments:
Post a Comment