கடந்த 2008ம் ஆண்டு யாருக்கும் வெட்கமில்லை தலைப்பில் எழுதினேன்.அதற்குபிறகுதற்போது சென்ற வாரம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்த பட இருக்கும் தேர்விற்கான விண்ணப்பம் பெறுவதற்காக (வேறு யாருக்குஎனது மனைவிக்குத் தான்) சேலம் சென்ற கொடுமையைத்தான் சொல்கிறேன். ஒரு பக்க விண்ணப்பம் அதன் விலை ரூ.50/- ஆனால் அந்த விண்ணப்பம் வாங்க ஒரு மைல்நீள வரிசை ,வரிசையில் பொறுமையாக நின்றுபாதி தூரம் சென்றபிறகு விண்ணப்பம் தீர்ந்து விட்டது ஸ்டாக் இல்லை என்றஅறிவிப்பு விண்ணப்பம் கடந்த 30.11.2009ம் தேதியிலிருந்து இரு நாட்களுக்கு ஒரு முறை வழங்குவதாக அறிவிப்பு ஆனால் அங்கு இருந்த பட்டதாரி இளைஞர்களின் கோபத்திலிருந்து அவர்கள் எவ்வளவு அலைகழிக்கப்பட்டுள்ளார்கள் என்பது நன்கு தெரிந்தது. இந்த கணிணி யுகத்திலும் ஒரு விண்ணப்பம் பெற எவ்வளவு துன்பங்கள், ஆன்லைனில் அனுப்பச் சொல்லாம், அல்லது டவுன் லோடு செய்துக் கொள்ளச் சொல்லலாம், ஏன் இந்த கொடுமை, இதன் உச்சகட்டம் போலீஸ் வந்து கும்பலை கலையச் செய்தார்கள்,அதுவும் அந்த இளைஞர்களை பார்த்து கெட்ட வார்த்தையில் ஒருமையில் திட்டியது போன்ற செயல்கள், பேய் அரசாண்டால் பிணம் தின்னும்சாத்திரங்கள் பாரதி பாடியது தான் நினைவுக்கு வருகிறது,
பின்குறிப்பு - நான் எனக்கு தெரிந்த ஒரு நண்பரிடம் கூறி தஞ்சை யிலிருந்து விண்ணப்பம் தருவித்தேன்,
என்ன கொடுமை சார்
வேதனையுடன்
ராகவேந்திரன்,தம்மம்பட்டி
No comments:
Post a Comment