Tuesday, December 15, 2009

அப்பாடா வெற்றி

இன்று நடைபெற்ற முதல் ஒரு தினப் போட்டியைத் தான் குறிப்பிடுகிறேன். நம்ம ஆட்கள் அடித்த 414-ஐ துரத்தோ துரத்து என்று துரத்தி ஒரு வழியாக கடைசி ஓவரில் நம்ம ஆட்கள் கெலித்து விட்டார்கள். தோனி முகத்தில் ஒரு வழியாக ஒரு அசட்டுசிரிப்பு, நமது ஆட்களின் பவுலிங் லட்சனம் அருமையாக புலப்பட்டது. அதிலும் குறிப்பாக சங்ககாரரா நமது பவுலர்களுக்கு எல்லாம் சங்கடகாரா ஆகி விட்டார். கடந்த 3 மேட்ச்களாக நமது அனைத்து பவுலர்களையும் வெளுத்து வாங்குகிறார். அது மட்டுமின்றி கடந்த 1 வருட காலமாக தில்ஷான் ஏதோ காத்து கறுப்பு அடித்து விட்டது போல் அனைவரையும் வெளுத்து வாங்குகிறார். நல்ல புல் சுவிங்கில் இருக்கிறார். அவர்கள் அடித்த அடிக்கு 40 ஓவரில் அவர்கள் சேஸ் செய்து உலக சாதனை செய்வார்கள் எனநினைத்தேன், உறி உறி நமக்கு அதிர்ஷ்ட தேவதை உதவி செய்யவே கெலிப்பு நம்மபக்கம் தான்,
சந்தோஷத்துடன்
ராகவேந்திரன், தம்மம்பட்டி


No comments:

Post a Comment