நேற்று ராஜீவ் காந்தி கொலை பற்றிய கே.ரகோத்தமன் அவர்கள் எழுதிய புத்தகத்தை இரவு 11.30 மணிக்கு படிக்க ஆரம்பித்து இரவு 03.00 மணிக்கு முக்கியமானவற்றை மீண்டும் மீண்டும் படித்து முடித்து 3.15 மணிக்கு தூங்கவே சென்றேன். அவ்வளவு விருவிருப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. எடுத்த உடனே ஜெட் வேகத்தில் பயணிக்க துவங்கிய புத்தகம் சற்று வரை தொய்வே இல்லாமல் பயணித்தது. ரகோத்தமன் அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகள் கேள்விகள் கேள்விகள் மனதை அரித்துக் கொண்டே இருக்கின்றன. என்ன தான் விடுதலைப் புலிகளுக்கு சப்போர்ட்டாக இருந்தாலும் கூட வை.கோ மற்றும் அவரது தம்பியின் செய்கைகள் மிகவும் கேவலமான செயல் , ஏன் அவர்களை இப்போது கூட நீதியின் முன்பு நிறுத்தி விசாரணை செய்யக் கூடாது. இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு யாராவது ஒருவர் பொது நல வழக்கு தொடர்ந்து அதை நீதிமன்றம் சிறப்பு கவனத்தற்கு எடுத்துக் கொண்டால் கூட தேவலை,நிச்சயம் இவர்கள் அனைவரும் விசாரிக்க பட வேண்டியவர்கள், அதிலும் நமது முக அவர்கள் அன்றைய தினம் (படுகொலை நடந்த தினம்) மீட்டிங் தீடிரென்று கேன்சல் செய்ததின் பின்னனி பற்றி விசாரிக்க வேண்டும். புத்தகத்தை முக இதுவரை படிக்கவில்லை எனநினைக்கிறேன். யாராவது தயவு செய்து அவரிடம் ஓசியில் கொடுங்கள் , படித்து முடிக்கட்டும் படித்து முடித்த பிறகு அவரின் வழக்கமான உரையாடலான கரகரப்பான குரலில் நான் சூத்திரன் அதனால் தான் குற்றம்சொல்கிறார்கள். இந்த அதிகாரி கூட அவாள் தான் அதனால் தான் என்னை குற்றம் சுமத்துகிறார்கள் என்று பல்லவி பாடுவார். அதையும் என்ன கொடுமை சார் என்று நாம் கேட்டு இருப்போம். ஆனாலும் அதற்காக எல்லாம் இது போன்ற பாதக செயல்களை நாம் அனுமதிக்க இயலாது, ஆனாலும் சில சின்ன நெருடல்கள் இந்த புத்தகத்தில் இவ்வளவு நாள் ரகோத்தமன் ஏன் வாயி மூடி மௌனித்திருந்தார். மற்றும் இவர் நேரிடையாக தொடுத்துள்ள கேள்வி கனைகளுக்கு ( திரு கார்த்திகேயனை நோக்கி) இதுவரை அவர் ஒரு பதில் கூட கொடுக்கவில்லை என்ன காரணம், யாரின் நிர்பந்தம்.
அனைத்தும் இறைவன் ஒருவனே அறிவான்
ஆனால் ஒரு இளம் தலைவரை அழித்த உங்களை ராஜபட்சே மூலம் அழித்த இறைவனின் திருவிளையாடலை என்னவென்று சொல்வது,
நாயை விட கேவலமாக தீடிரென்று நெற்றியில் சுடபட்டு காக்கா குருவி இறந்து கிடந்தது போல கிடக்கும் பிரபாகரனின் மரணக்காட்சி இன்னமும் கண்முன்னே நிற்கிறது. வினை விதைத்தவன் வினை அறுப்பான். ஆனாலும் இன்னமும் நமது அறிவு பெருந்தகைகள் ராஜீவை கொன்றது சிஐஏ என்று பினாத்திக் கொண்டிருப்பது தான் மிகப் பெரிய ஜோக்
துர்வாசர், தம்மம்பட்டி
அய்யா சேலத்துல எங்க இருக்கீங்க? கொஞ்சம் word verification எடுத்துவிடுங்க சாமி!
ReplyDeleteநன்றி சிவக்குமரன்
ReplyDeleteநான் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி என்னும் கிராமத்தில இருக்கிறேன்
Good One..!
ReplyDelete