தவிர்க்க முடியவில்லை, சுயபுராணம் தான்,இருப்பினும் மனது கொள்ளா சந்தோஷம்,
எனது ஏக புத்திரன் ஹர்ஷவர்த்தன் பள்ளி மட்டத்தில் spelling Bee தேர்வில் தேர்ச்சி பெற்று சென்ற ஞாயிறு நடைபெற்ற மாவட்ட அளவு தேர்வில் தேர்ச்சி பெற்று இப்போது மாநில அளவில் தேர்வு எழுத உள்ளான். 2ம் வகுப்பு படிக்கிறான். அறுந்த வால் என்பதற்கு டிக்ஷனரியில் தேட வேண்டாம் எனது வீட்டிற்கு வந்தால் போதும். என்னிடம் எனது வாடிக்கையாளர்கள் மற்றும் நலம் விரும்பிகள், மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும், ஏன் ஒன்றோடுநிறுத்திக் கொண்டு விட்டீர்கள். ஒன்றுக்கு ஒன்று துணை வேண்டும் இன்னொன்று என்பார்கள். இவன் செய்யும் குறும்புக்கே அவசரத்திற்கு 100 ஐ அழைக்க வேண்டியுள்ளது. இதில் இன்னொன்று எங்கே நினைக்க , மிக சரியான சேட்டை காரன், விஜய் ரசிகன் எல்லா குழந்தைகளை போல , விஜயை பற்றி நான் ஏதாகிலும் வாயை திறந்தாலே அப்படி ஒரு கோபம் வருகிறது, படிப்பில் கெட்டியாக உள்ளான் இந்த விஷயத்திலாவது அவன் அம்மா போல் இருப்பது எனக்கு பரவாயில்லை தான் உறி உறி
ஒரு தகப்பனுக்கே உரிய பெருமையுடன்
மகிழ்ச்சியுடன்
ராகவேந்திரன்,தம்மம்பட்டி
No comments:
Post a Comment