Wednesday, April 7, 2010

ஐபிஎல் கூத்துகள்

ஆயிற்று சொல்லி வைத்தாற் போல் தேர்வு சமயத்தில் கிரிக்கெட் மேட்ச் கொண்டாட்டங்கள்
நான் படித்த காலத்திலிருந்தே இதே பிரச்சினை தான். முழுத் தேர்விற்கும் சரிவர படிக்க முடியாமல் கிரிக்கெட் பார்க்க வேண்டும் என்ற வேட்கையில் வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டு மார்க் குறைந்து திட்டு வாங்கியது தான்மிச்சம், இதற்கு ஒரே தீர்வு எழுத்தாளர் ஜெயமோகன் என்னுடன் ஒரு முறை கூகிள் சாட்டில் கூறியது போல டிவி என்னும் மாய பிசாசான இடியட் பாக்ஸை வாங்காமல் இருக்க வேண்டும் , அப்படியே வாங்கியிருந்தால் 12ம்வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் உள்ள வீட்டில் அதை பரண் மேல் கட்டி வைப்பது தான் உசிதம்.
நிற்க. எது எப்படி இருப்பினும் ஐபிஎல் கூத்தினை தினம் தோறும் நானும் எனது 2ம் வகுப்பு படிக்கும் எனது குட்டிபிசாசு மகனும் பார்த்து ரசித்து வருகிறோம். அதிலும் அவனுக்கு சியர்ஸ் கேர்ஸ் வந்தாலே ஒரே கொண்டாட்டம் தான் அவர்களை போலவே இவனும் குதிக்கிறான் , அதிலும் சென்ற மேட்சில் நமது முரளி விஜய் அடித்த சிக்சர் -க்கு இவன் கத்திய கத்தில் பக்கத்து வீட்டில் இருந்து ஏதாகிலும் பிரச்சினையா என்று காலை எழுந்தவுடன் கேட்டார்கள் . கிளாசிக் ஷாட் என்பது எப்போதோவது ஒரு முறை தான் , லைன் அன் லெங்த் பால் கூட சகட்டு மேனிக்கு விளாசுகிறார்கள். முழுவதுமாக பேட்ஸ்மேன் ஒரியண்டட் கேம் தான் , பவுலர்கள் செத்தார்கள். அடிக்கொருமுறை ஸ்டேடியத்தில் வந்துள்ள சினிமா புள்ளிகளை காண்பித்து புளங்காகிதம் அடைகிறார்கள். வாழ்க லலித் மோடியிசம், அவர் இப்போதைக்கு கதாநாயகர் ஆகி விட்டார் நேற்றைய மேட்சில் அவரிடம் ஆட்டோகிராப் கேட்கிறார்கள் நமது சென்னை வாசிகள், ஓனர்கள் எத்தனை கோடி கல்லா கட்டுகிறார்கள் என்று நாளுக்கு ஒரு புள்ளி விபரம்,செய்தித் தாள்களில் நமக்கு என்னமோ தெருக்கோடி தான்,
துர்வாசர்,தம்மம்பட்டி


1 comment:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete