என்னமோ உலகத்தில்சானியா ஒருவர் தான் பெண்மணி போலும், சோயிப் மாலிக் ஒருவர்தான் ஆண் போலும் இவர்கள் என்னமோ உலகத்தில் யாருமே செய்யாத திருமணத்தைசெய்துக் கொள்ளப் போவதாக கடந்த 10 நாட்களாக செய்தித்தாள்களிலும் மீடியாக்களிலும் அடித்த கூத்துகளுக்கு அளவே இல்லை, அதிலும் முகம்மதியர்கள் திருமண வாழ்க்கையில் விவாகரத்து என்பது எளிதான ஒன்று என்று அனைவருக்கும் தெரியும், அந்த அடிப்படை பாடம் கூட புரியாமல் குண்டானதால் ஆயிஷாவை வேண்டாம்என்று விட்டார், உண்டானதால் ஆயிஷாவை வேண்டாம்என்று விட்டார், என்று ஒரே பினாத்தல்கள், செலிபரிட்டியாக இருப்பதால் சோயிப் மற்றும் சானியா வின் அந்தரங்க வாழ்க்கையில் விளையாட இந்த மீடியாக்களுக்கு யார் இந்த உரிமையை கொடுத்தது என்றே தெரியவில்லை. தைரியம் இருந்தால் அரசியல் வியாதிகளின்பர்சனல் லைப்-னை பற்றி எழுதட்டுமே அங்கு ஏன் செல்ல வேண்டும், நமது அஞ்சா நெஞ்சன் மதுரை அழகிரி அண்ணாரையோ அல்லது தளபதி ஸ்டாலின் பற்றி ஏதேனும் எழுதட்டும், அடுத்த நிமிடம் ஆட்டோ வீட்டிற்கு வந்து விடாது. தைரியமில்லாத கோழைகள் வடிவேலு பாணியில் சொல்வது என்றால் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறான் ரொம்ப நல்லவன்என்று யார் உள்ளார்களோ அவர்களை குறி வைத்து தாக்குவது என்ன கோழைத்தனம். இதில் நல்லபடியாக அவர்கள் திருமணம் முடிந்து அவர்கள் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருக்கும் போது கூட இந்த பாழர்ய் போனவர்களுக்கு சானியா இனி இந்திய மருமகளா, அல்லது பாகிஸ்தான் மருமகளா என்ற அடுத்த கேள்வி வந்து விட்டது. இதில் நமது சண்ட மாருதர் பால் தாக்கரே போன்றவர்கள் சானியா செய்தது மாபெரும் துரோகம் மன்னிக்க முடியாதது என்று வீராப்பு வேறு, பாம்பேவில் உட்கார்ந்துக் கொண்டு சண்டித்தனம்செய்துக் கொண்டு இருக்கும் இவருடையபினாத்தல்களுக்குஅளவே கிடையாது, இந்த உளற்ல் பேர்வழி போன மாதம் டெண்டுல்கரை பற்றி அவதூறு செய்து சூடு வாங்கிக் கொண்டார். ஏனென்றால் டெண்டுக்ரின் நேர்மை மற்றும் தேசப்பற்று இவரை காட்டிலும் மேலானது, அதனால் அந்த உளறல் எடுபடவில்லை. இப்போது சானியா பாவம் , அதிலும் பெண் வேறு, அதிலும் இஸ்லாமியர் வேறு , மீடியாக்களின் உதவியோடு தினமும் சாடல் தான் வசை தான், யார்யாரையோ ஊமையாக படைக்கும் இறைவன் இது போன்ற உளறல் பேர்வழிகளுக்கு ஏன் பேச வாய் கொடுத்தானோ
நட்புடன்
துர்வாசர்-தம்மம்பட்டி
No comments:
Post a Comment