Saturday, May 15, 2010

என்ன கொடுமை சார்

கடந்த 10 நாட்களுக்கு முன்பு நமது முதல்வர் அவர்களின் ஒரு நேர்காணல் ஏதேச்சையாக நேற்று படிக்க நேரிட்டது. அட என்ன வில்லத்தனம் என்று தோன்றியதின் விளைவே இக்கட்டுரை உயர்நீதிமன்றத்தில் அவருக்கு கருப்புக் கொடி காட்ட இருந்த சில வழக்கறிஞர்களை திமுக (குண்டர்கள்) சாரி தொண்டர்கள் தாக்கினார்கள். இது குறித்து சட்டமன்றத்தில் திரு துரைமுருகன் கூட எங்களுக்கு ரோஷம் கிடையாதா மானம் கிடையதா என்று மறு நாள் வாங்கின காசுக்கு மேல் கூவினார்.நேற்று படித்த நேர்காணலில் விஷயத்தில் பளீரென்று சில உண்மைகள் நமது மு.க. வாயிலேயே வெளிப்பட்டது.
நிருபர்- நேற்று உயர்நீதிமன்றத்தில் சிலர் தானே எதிர்ப்பு தெரிவிக்க இருந்தார்கள் அவர்களை யார்என்று அடையாளம் கண்டு அவர்களை அப்புறப்படுத்த இயலாதா என்ன காவல்துறையினருக்கு என்று கேட்டனர்.
அதற்கு நமது முக அருளிய பதில் என்ன தெரியுமா, அது தான் காவல்துறையினர் நீதிமன்றத்திற்குள் செல்ல கூடாதா? ஆகா என்ன ஒரு அருமையான தன்னிலை விளக்கம்,
காவல்துறையினர் செல்ல முடியாததால் தான் திமுக குண்டர்களை விட்டு தாக்கினோம்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஒரு மாநில முதல்வர் அவர் வாயாலேயே ஒப்பதல் வாக்குமூலம் தருகிறார் , என்ன கொடுமை சார், இவர்கள் காட்டாத கருப்புக் கொடியா
இந்திராகாந்தியை கருப்பு கொடீ காட்டுகிறேன் என்ற போர்வையில் அவரை கொலை செய்யும் முயற்சியில் இறங்கி அதை யாரோ ஒரு தலைவர் அநேகமாக நெடுமாறன் என நினைக்கிறேன் முதுகில் வாங்கி காப்பாற்றியதை நாடு அதற்குள் மறந்து விடுமா என்ன? இவர்களுக்கு ஒரு நியாயம், அடுத்தவர்களுக்கு ஒரு நியாயம்
வேதனையுடன்
துர்வாசர்,தம்மம்ப்ட்டி


No comments:

Post a Comment