Wednesday, June 16, 2010

கோணல் பக்கங்கள்

கடந்த சில வாரங்களாக தமிழ் பதிவுலகில் நடந்து வரும் பிரச்சினைகள் குறித்து அநேகமாக எல்லோரும் அவரவர் கருத்தை கூறி விட்டார்கள். இதில் யார் பற்றியும் எந்தவித கருத்தும் கூறாமல் இருக்கிறார்கள் அல்லவா அந்த இனத்தைச் சேர்ந்தவன். வேலை பளுக்கு இடையே கிடைக்கும் நேரத்தில் மனதிற் தோன்றும் கருத்தை பதிவு செய்யும் இடமாகத் தான் இந்த பிளாக்கை கருதுகிறேனே ஒழிய மனதிற்குள் ஒன்றும் பெரிய கருத்து கந்தசாமி என்றோ அல்லது எழுத்து ஏகாம்பரமோ என்ற எண்ணமோ கிடையாது, இதில் எனக்கு பிடித்த தமிழ் பிளாக்கர்களின் முகவரி தேடி சென்று படிப்பேன், பிடித்திருந்தால் பின்னூட்டமும் இடுவேன். ஆனால் எனது கட்டுரைக்கோ எனது பிளாக்கிற்கோ பின்னூட்டம் இடவில்லை என்று வருந்தியதும் கிடையாது, யாரிடமும் கேட்டதும் கிடையாது, அவரவர்கள் விருப்பம் அது என்று எண்ணுபவன், நிற்க,
யாரோ யாரையோ திட்டியுள்ளார்கள். ஆனால் நான் மிகவும் விரும்பும் ஒருபதிவர் அவர் பெயர் கூற விரும்பவில்லை, அவரின் பிளாக்கை ஐடி அப்ரூவல் கொடுத்தால் தான் ஓப்பன் ஆகும் அளவிற்கு பதிவு செய்த நபர்கள் படிக்கும் தளமாக மாற்றியுள்ளார். அவரையும் வெள்ளந்தியாக நான் சார் ஓப்பன் ஆகவில்லை என்று மெயில் செய்து கேட்டதற்கு, தொழில் நுட்ப காரணம் என்றார், இருக்கட்டும் பரவாயில்லை, மனதளவில் காயப்பட்டுள்ளார், மனதின் வலி ரணம் குறைய சில நாட்கள் ஆகலாம் என எண்ணுகிறேன், எங்கள் ஊர் அருகில் ஒரு சொலவடை உண்டு, வெல்லம் திங்கிறவன் ஒருத்தன் , விரல் சூப்புவன் ஒருவன் அதுபோல மொத்த தமிழ் பதிவுலகமே மோசம் என்றோ, அதில் அனைவருமே படு பாதக செயல்களை செய்பவர்கள் என்று யாரும் எண்ண வேண்டிய அவசியம் கிடையாது, அதுபோல் இதுபோன்ற பதிவினை ஈடுபட்டால் சம்மந்தப்பட்டவர்களின் மனநிலை எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்ற சம்மந்தப்பட்டவர்கள் சற்றே மனம் திறந்து தெளிந்த சிந்தனையுடன் எண்ணி பார்த்துக் கொள்ளுங்கள்,
மற்றபடி அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்
காதருந்த ஊசியும் கடைக்கண் வாரா என்ற நிலையை உணர்ந்தால் போதுமானது
அன்புடன்
துர்வாசர்,தம்மம்பட்டி


No comments:

Post a Comment