Saturday, June 19, 2010

சிங் இஸ் கிங் ( Singh is King)

பஞ்சாபியர்களுக்கு உரிய ஆக்ரோஷம் கோபம் ரியாலிட்டி உக்கிரம் அனைத்தும் நேற்றைய ஆட்டத்தில் ஹர்பஜனிடம் வெளிப்பட்டது சிக்ஸர் அடித்தவுடன் அக்தரை பார்த்து ஒரு உறுமு உறுமினார் பாருங்கள் இங்கு தம்மம்பட்டியிலேயே உக்கிரம் தாளாமல் டிவி வழியாக வெளி வந்து விட்டது, மிக அருமையான மேட்ச் மிகவும் ரசித்துப் பார்த்தேன்.


சேட்டன் சர்மா வினை மியான்தாத் 1986ல் அடித்ததற்கு இப்போது 2010 ஜுன் 19ம் தேதி சிங் (சிங்கம்) எதிர் வினை ஆற்றி விட்டது. அதிலும் 49ம் ஓவரிலே இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டனர், ரெய்னா ரன் அவுட் ஆனவுடன் சரி தான் என்று ஹார்ட் பீட் எகிற ஆரம்பித்து விட்டது சிங்கம் பிளிறி விட்டது, பஜ்ஜி ஒரு ரியல் கேரக்டர் என்று வெளிபடுத்திய அந்த சிக்ஸர் அவர் வாழ்நாள் முழுவதும் மறக்கா வண்ணம் அமைந்து விட்டது.

ஆனாலும் இந்த மேட்சில் சில சொதப்பல்களை கூறியே ஆகவே ண்டும், அக்தர் ஓய்வு பெற்று விடுவது நல்லது, நுரை தள்ளிய மாடு போல மனிதரால் முடியவில்லை , வாய், காது மூக்கு அனைத்திலும் புசுபுசு என்று மூச்சு விடுகிறார், அந்திம கால இயான் போத்தம் போல ஆகி விட்டார், கவுரமாக ரிட்டயர்ட் ஆகுங்கள் பாஸ், அமீர் இருக்கிறாக, ஆசிப் அண்ணாச்சி இருக்கிறாக, சமி அண்ணாச்சி இருக்கிறாக , இவர்கள் பார்த்துக் கொள்வார்கள், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் பாசன்ஜர் ஆகி விட்டது, அதுவும் இந்தியா ஜெயித்தவுடன் அவரின் முக பாவணை அதான் ஜெயித்தாவிட்டதே போங்கப்பா போய் வேலை பாருங்கப்பா என்று அவரின் பாடி லாங்வேஜ் வெளியிட்டது தான் அந்தோ பரிதாபம், பழைய அக்தர் இவ்வாறா இருப்பார், சிங்கம் அசிங்கமாகி விட்டது.

ஆனால் சுரேஷ்ரெய்னா புல் பிளட்ஜில் இருக்கிறார் , மனிதர் அடிக்கும் சிக்சர்களுக்கு நான் அடிமை


3 comments:

  1. பாலோயர் விட்கெட் வைங்க தல!

    ReplyDelete
  2. எனது வலைப்பக்கத்தை புதுப்பித்துக் கொடுத்த எனது இனிய நண்பர் பெத்துசாமிக்கு (http://pethusamy.blogspot.com) மிகவும் நன்றி

    ReplyDelete
  3. நன்றி அய்யா. வலையுலகில் கலக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete