தேசபற்று என்றாலே ஜப்பானை உதாரணம் சொல்வார்கள் நம்மில் அநேகம் பேர், அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நேற்றைய கால்பந்து மேட்ச் நாக் அவுட் ஸ்டேஜில் நடைபெற்றது , நேற்று நடந்த போட்டியின் போது ஜப்பான் பெனால்டி ஷீட் அவுட் முறையில் தோற்றுப்போனது, இருப்பினும் போட்டி முழுவதும் ஜப்பானியர்களின் கை ஓங்கியிருந்தது. அதிலும் மத்திய கள ஆட்டக்காரர் மற்றும் நேற்றைய போட்டியின் மேன் ஆப் தி மேட்ச் ஆக தேர்ந்து எடுக்கப்பட்ட கெஸ்யூகி ஹோண்டா என்பவர் மிக அருமையாக ஆடினார்.
மேலும் மேட்சின் முடிவில் நாக் அவுட் டில் தோற்றவுடன் ஜப்பானே அழுதது , கோச் முதல் பார்வையாள்ர்கள் வரை மற்றும் விளையாட்டு வீரர்கள் வரை அனைவரும் அழுதனர். பாசமலர் படம் பார்த்ததுபோல திருப்தியில் நானும் இரவு தலையணையை நனைத்து போதாத குறைக்கும் போர்வையும் நனைந்து விட்டது .
ஆனாலும் கோச் டகேசி ஒகோடா அழுதது தான் மிகப் பெரிய ஹைலைட் என கருதுகிறேன், எனக்கு தெரிந்த கோச்சும் கண்ணீர் உகுத்து நான் கண்டதில்லை,
ஆனாலும் ஆசியாவைச் சேர்ந்த இந்த ஒரு நாடாவது இந்த அளவு தேறி வந்துள்ளதை கண்டு எனக்கு மகிழ்ச்சி, பாரத தேசம் பழம் பெரும் தேசம் 100 கோடி மக்கள் தொகையை தாண்டியும் கால் பந்தினை பொறுத்த வரை தேசத்திற்கான டீம் கூட கிடையாது ஜோனல் வாரியான டீம் தான், மற்றும் தேர்ச்சி சுற்றிற்கு கூட தேறுவது கிடையாது, என்ன செய்ய பெருமூச்சு விட வேண்டியது தான்,


கிரிக்கெட்டைப் பற்றி மட்டும் தான் எழுதுவீங்கன்னு நெனைச்சேன். கால்பந்து பற்றிக்கூட எழுதி கலக்குறீங்க அய்யா. கீட் இட் அப். (இதை எப்படி தமிழ்ல சொல்றது சார்?)
ReplyDelete